50வது திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மகாராஜா .
மகாராஜா (விஜய் சேதுபதி) என்பவர் சென்னையில் சலூன் கடை வைத்திருப்பவர் தனது மகளுடன் வாழ்ந்து வருபவர் . அவரது மகள் ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்குச் சென்றிருக்கும் போது தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’ திருடு போய்விட்டதாகவும் அதனை கண்டு பிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் செய்கிறார் .
காணாமல் போன லட்சுமி என்பது என்ன? அது கண்டுபிடிக்கப்பட்டதா ? மகாராஜா யார்?இதன் பின் நடப்பவை நான்-லீனியர் பாணியில் சொல்லப்படும் கதையாக விரிகிறது .
கதையின் நாயகனாக மகாராஜா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார், அவரது உடல்மொழியும் தோற்றமும் கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.இந்தப்படம் அவரது 50-வது படம் என்பதால் படத்தினை பற்றிய எதிர்பார்ப்புகள் ஏராளம் அவற்றை தன நடிப்பால் விஜய் சேதுபதியும் இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனும் பூர்த்தி செய்துவிட்டார்கள் என்று சொல்லலாம். இயக்குனர் இதற்க்கு முன் குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர்..
இந்த படத்தில் குறிப்பாக அனுராக் கஷ்யப்பின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது ,மேலும் மம்தா மோகன்தாஸ் , அபிராமி, நடராஜன் , பாய்ஸ் மணிகண்டன் , பாரதிராஜா , சிங்கம் புலி , முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வண்ணம் நன்கு நடிப்பை வெளிபடித்தியுள்ளார்கள் .

விறுவிறுப்பாக நகரும் திரைக்கதையோடு , தேர்ச்சியான தொழில்நுட்ப கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்புடன் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் படத்தினை நன்கு உருவாக்கியுள்ளார், இயக்குனருக்கு பக்கபலமாய் B .அஜனீஷ் லோக்நாத்தின் இசையும்,ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் காட்சிப்பதிவுகளும் அமைந்துள்ளது. மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் கைவண்ணம் படத்தில் சிறப்பாக உள்ளது
மொத்தத்தில் இந்த ராஜா மகாராஜாதான்.
