பிரபல இசை அமைப்பாளரும், நடிகரும் ஆன விஜய்ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள மார்கன் திரைப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார்.
உடல் முழுவதும் கருப்பான நிலையில் ஒரு இளம் பெண்ணின் பிரேதம் சென்னையில் கண்டுபிடிக்கப்படுகிறது ,விஜய் ஆண்டனி , மும்பையில் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் அவர் இந்த கொலை வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார் அவர் செய்யும் புலனாய்வு விசாரணையின் மூலமாக ,தமிழறிவு என்னும் இளைஞர் மீது சந்தேகம் ஏற்படுகிறது ,விஜய் ஆண்டனியின் சந்தேகத்திற்கு ஏற்றார் போலவே அவரும் நடந்து கொள்கிறார் ,அந்த இளைஞருக்கு எதையும் அப்படியே நினைவில் பதிய வைத்துக் கொள்ளும் அபாரமான மெமரி பவர் உள்ளது என்பது தெரிய வருகிறது ,அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்த பிறகு, அவரின் உதவியுடன் கொலை செய்pவனை விஜய் ஆண்டனி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ,இறுதியில் விஜய் ஆண்டனி அந்த கொலைகாரனை கண்டறிந்தாரா? இந்த கொலைக்கான பின்னணி என்ன? என்பதுதான் மார்கன் படத்தில் மீதி கதை.
இது போன்ற புலனாய்வு கதைகள் திரில்லர் கதைகளில் மையக்கதாபாத்திரமேற்று நடிப்பது விஜய் ஆண்டனிக்கு மிகவும் பொருந்தக் கூடியது ,அந்த வகையில் இந்தப் படத்திலும் தனக்கே உரிய பாணியில் காவல்துறை அதிகாரியாக ,என்ன நடந்தது ?எதற்காக நடந்தது? என்பதை கண்டறியும் கதைக்களத்தில் இயல்பான நடிப்பை வழக்கம் போலவே வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆயிருக்கும் அஜய் திஷானின் கதாபாத்திரமும், அவை அவர் சிறப்பாக கையாண்டிருப்பதும் சிறப்பாக உள்ளது.மேலும் குறிப்பிட்டுச் செல்ல வகையில் கான்ஸ்டபிள் ஆக நடித்துள்ள மகாநதி சங்கர், இன்ஸ்பெக்டராக வரும் பிரிகிடா,சமுத்திரக்கனி ,தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட திரை நேரத்தை நன்றாகவே பயன்படுத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம்.

கிரைம் திரில்லர் கதைகளுக்கு படத்தினுடைய ஒளிப்பதிவு மிக முக்கியமான பங்களிப்பினை கொடுக்க வேண்டும் ,அந்த வகையில் இந்த படத்திற்கு எஸ் .யுவாவின் ஒளிப்பதிவு மிகப்பெரிய ஆதரவை இயக்குனருக்கு கொடுத்துள்ளது என்று சொல்லலாம் ,கதையின் நாயகன் விஜய் ஆண்டனி, இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் ,இந்த படத்திநை பொறுத்த வரையில் பின்னணி இசையில் அவர் அதிக அளவில் ஸ்டோர் செய்துள்ளார்.
படத் தொகுப்பாளர் லியோ ஜான்பால் இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருக்கிறார் ,விறுவிறுப்பான த்ரில்லர் கதையில் சித்தர்களின் சக்தியையும் இணைத்து கையாளப்பட்ட சிறப்பான திரைக்கதை காட்சிகளுடன், கதைக்கு பொருத்தமான நடிகர்களையும் நேர்த்தியாக தேர்வு செய்து, நிறைவான படத்தை கொடுத்துள்ளார் ,அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் கிளைமாக்ஸ் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
மார்கன்- ரசிக்கக்கூடிய மாறுதலானவன்
