கதையின் நாயகன் அருண் (மணிகண்டன்) எந்த வேலையும் செய்யாமல் உள்ள இளைஞனான அவருக்கும் ஐடியில் பணிபுரியும் திவ்யாவுக்கும் (ஸ்ரீகவுரி ப்ரியா) கல்லூரி காலம் தொட்டே காதல். 6 ஆண்டுகளாக இந்த காதல் தொடர்கிறது.தனது காதலி எப்போதும் தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று விரும்பும் காதலன்..அதனால் ஏற்படும் இன்னல்கள் ….இதனால் காதலை முறித்து கொள்ளலாம் என முடிவு செய்யும் காதலி,அவளை சமாதானப்படுத்தும் காதலன், முடிவில் அவர்களது காதல் கைகூடியதா?என்பதை சொல்லுகிறது லவ்வர் படத்தின் மீதி கதை.

டாக்ஸிக் காதலை சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்,.காதல் வசப்பட்டுள்ளவர்களுக்கும், வசப்பட விரும்புபவர்களுக்கும் தேவையான நிறைய விஷயங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
.ஜெய் பீம் ,குட் நைட் என்ற படங்க்ள் வாயிலாக ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் மணிகண்டன் .இந்த படத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்
நாயகியாக நடித்துள்ள ஸ்ரீகவுரி ப்ரியா தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கும் வண்ணம் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படித்தியுள்ளார்
மேலும் கண்ணா ரவி., ஹரிஷ்குமார் சரவணன், கீதா கைலாசம் போன்றவர்களின் கதாபாத்திரங்களும், அவர்களது பங்களிப்பும் படத்தின் கதையோட்டத்துக்கு துணை நின்றுள்ளன
காதலை பின்புலமாக் கொண்ட கதைகளுக்கு இசையும் ,ஒளிப்பதிவும் பெரிய பலமாக அமையவேண்டும், அதற்க்கு ஏற்றாற்போல் குறைவின்றி இப்படத்தில் ஷான் ரோல்டனின் பிண்ணனி இசையும் ,ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் நன்றாக அமைத்துள்ளன.
இக்கால காதலர்களுக்கு ,குறிப்பாக காதலர்தினம் வரும் மாதத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ஏரளாமான டிப்ஸ் தரும் ..
