இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா ”
கதையின் நாயகன் கதிரவென் ,நாயகி சாந்தினி கவுரும் காதல் வசப்படுகிறார்கள். ஆனால் வாழ்வியல் சம்பந்தமாக இவரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் கதிரவனுக்கு ,சாந்தினி மீதான காதலில் நாட்டம் குறைகிறது. இந்த சூழ்நிலையில் கதிரவனின் அலுவலகத்தில் மாயா புதிதாக வேலையில் சேர்கிறார் ,அவரது நடவடிக்கைகளால் கவரப்படும் கதிரவென், மாயா கிளம்மி மீது காதல் கொள்கிறார் .தன் காதலை கதிரவென் வெளிப்படுத்தினாலும், முன்பே வேறு ஒருவரை நேசிக்கும் மாயா அந்த காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். கடைசியில் கதிரவெனின் காதல் என்னவாயிற்று ?மாயா, சாந்தினி இவர்களது நிலை என்ன என்பதே படத்தின் மீதி கதையாகும்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரவென் ,மித்ரன் என்னும் கதாபாத்திரத்திலும், மற்றும் சாந்தினி கவுர், மாய கிளம்மி, ஆகியோர் ஶ்ரீஷா, நீரா என்னும் கதாபாத்திரங்களிலும், மற்றும் நந்தகுமார் அருண் என்னும் கதாபாத்திரத்திலும் ,தங்களது காதல் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தும் வகையில் நடித்துள்ளார்கள். முழு நீள காதல் உணர்வுகளை சித்தரிக்கும் கதைகளுக்கு இசையும் ,ஒளிப்பதிவு மிகவும் இன்றையமையானது ,இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹரிமாறனும் ஒளிப்பதிவாளர் ஏகணேஷ் நாயரும் படத்தின் கதை களத்திற்கு பொருத்தமான பின்புலத்தை தரக்கூடிய வகையில், தங்களது பணியை நன்கு செய்துள்ளார்கள்.குறிப்பாக மலேசிய காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளது.கௌசல்யா நவரத்தினம் எழுதி இருக்கும் இந்த காதல் கதைக்கு, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் கதிரவென். இவர் புதியவர்களை கொண்டு இக்கால வாழ்வியல் காதலை படமாக்கியுள்ளார்.
உணர்வுபூர்வமான காதல் போராட்டக் களத்தினை கொண்ட கதையில், நிறைய புது வரவுகள் இணைந்து பணியாற்றி இந்த படத்தை கொடுத்திருக்கும் முயற்சி பாராட்டப்பட கூடியது.