முகேன் ராவ், பவ்யா தாரிகா நடிப்பில், டி.ஆர்.பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜின் – தி பெட் படத்தில் பவ்யா தரிகா, ராதாரவி ,வடிவுக்கரசி பால சரவணன், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர்ற முகேன் ராவ், வரும்போது ஜின் அப்படிங்கிற பேயயும் கொண்டு வருகிறாரு, ஒரு பெட்டிக்குள் அந்த ஜின்ன வச்சிக்கிட்டு அதுக்கு பிஸ்கட் எல்லாம் கொடுத்து ஒரு செல்லப்பிள்ளை போல தன்னுடைய பராமரிப்புல வளர்த்துக்கிட்டு வர்றாரு, அந்த ஜின், முகேன் ராவ் கிட்ட வந்த நேரம், அவருக்கு நல்ல நேரமா இருந்தாலும் அதுக்கு மாற்றாக அவரோட வீட்டில் உள்ள மத்தவங்களுக்கு நல்ல விதமாக அமையாமல் கெட்ட விஷயங்களை கொடுக்குது, இந்த மாதிரி சமயத்துல, ஒரு நாள் முகேன் ராவோட மனைவி பவ்யா ரத்த காயங்களோட மயக்கமாய் இருக்கிறதை பார்த்த எல்லோரும் பவ்யாவோட இந்த நிலைமைக்கு ஜின் தான் காரணம் அப்படின்னு நினைக்கிறாங்க,அதனால ஜின்ன,அது இருக்கிற பெட்டியோட தூக்கி வெளியே வீசிடுறாரு முகேன் ராவ் ,ஆனா கடைசியில உண்மை தெரிய வருகிறது உண்மையில நடந்த சம்பவத்துக்கு காரணம் ஜின் தானா ?அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு இருக்கா அப்படிங்கறதுதான் படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனா சக்தி என்னும் கதாபாத்திரத்துல முகேன் ராவ் நடிச்சிருக்காரு, ஒரு ஃபேண்டஸி திரில்லர் படத்துல தன்னுடைய கேரக்டருக்கு ஏத்த வகையில இவர் நடிப்பு அமைஞ்சிருக்கு. பிரியா கதாபாத்திரத்துல கதாநாயகியாக நடித்துள்ள பவ்யா தாரிகாவை பொருத்தவரைக்கும், முகேன்ராவுக்கு பொருத்தமான இணையாக ,காதல் காட்சிகள்ல தன்னுடைய நடிப்பை நல்லாவே வெளிப்படுத்தி இருக்காங்க, பால சரவணனுடைய காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆயிருக்கு ,அது மட்டும் இல்லாம மூத்த நடிகர்களான வடிவுக்கரசி ,நிழல்கள் ரவி, ராதாரவி இவங்க எல்லாருமே அவரவர்கள் கதாபாத்திரங்களில்,தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்காங்க.

இசையமைப்பாளர் விவேக் மெர்வினுடைய பங்களிப்பு பாடல்களில் ஓகே ரகமாக இருக்கு ,பின்னணி இசையில ,அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்திருக்கு என்று சொல்லலாம்.ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா மலேசியா மற்றும் சென்னை பகுதிகளை அழகுற படமாக்கி இருக்கிறாரு.
ஜின்ன மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிற இந்த படத்தினுடைய துவக்கம், மிகுந்த ஆர்வத்தை கொடுக்கிற வகையில் இருக்கு ,அதேபோல தொடர்ந்து பின்வரும் காட்சிகளில் ,திரைக்கதை கவனமாக கையாளப்பட்டு, கதை நகர்த்தபட்டு இருந்திருந்தால் ,குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய படமாக இந்த படத்தை இயக்குனர் டி ஆர் பாலா உருவாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஜின் – தி பெட் -லாஜிக் பார்க்காம பார்க்கக்கூடிய டைம் பாஸ் படம்
