Monday, May 4

இன்ஃபினிட்டி- விமர்சனம்

அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கிய ‘இன்ஃபினிட்டி’ திரைப்படத்தில் நட்டி நட்ராஜ்,வித்யா பிரதீப், முனிஷ்காந்த் (ராமதாஸ்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் இளம்பெண் ஒருவர் , எழுத்தாளர் ஒருவர் , மற்றுமொரு இன்ஸ்பெக்டர், பார் ஒன்றில் ஒருவர் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். இந்தத் தொடர் கொலை வழக்குகளை சிபிஐ அதிகாரி எவ்வி இளவளவனிடம் (நட்டி நட்ராஜ்) விசாரணை செய்கிறார், அவரது விசாரணையில் இந்த கொலைகளில் உள்ள தொடர்பினை அவர் தெரிந்து கொள்கிறார் ,அந்த தொடர் கொலைகளுக்குள் உள்ள தொடர்பு என்ன?அந்த அதிகாரியால் யார் கொலையாளி என கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதே ‘இன்ஃபினிட்டி’ படத்தின் மீதி கதை.

படத்தில் சிபிஐ அதிகாரி எவ்விஇளவளவனாக நட்டி நட்ராஜ் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைவாக நடித்துள்ளார்,அவருக்கு உதவி செய்யும் டாக்டராக ,நந்தினி கதாபாத்திரத்தில் வித்யா பிரதீப் நடித்துள்ளார். மேலும் கான்ஸ்டபிளாக நடித்துள்ள முனீஷ்காந்த் பெரிதாக ரசிக்க வைக்கவில்லை. பாலசுப்ரமணியத்தின் இசையும் சரவணன் ஸ்ரீயின் ஒளிப்பதிவும் ஓரளவுக்கு படத்துக்கு கை கொடுத்துள்ளது.

துப்பறியும் த்ரில்லர் கதையை எடுத்துக்கொண்ட இயக்குனர் சாய்கார்த்திக் இன்னமும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், படத்தின் காட்சிகளில் விறுவிறுப்பை தந்திருக்கும், சிறப்பான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் கதையாக ஒரு படத்தை உருவாக்க, நட்சத்திரதேர்வு மட்டுமின்றி வலுவான திரைக்கதையும் மிக முக்கியமானது, அது சரியாக அமைந்து ,அதனுடன் சிறந்த தொழில்நுட்பாளர்களும் இணைந்தால் படம் நிச்சயம் பேசப்படும்.

‘இன்ஃபினிட்டி’ எந்த எதிர்பார்ப்புமின்றி படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றாது.

Spread the love