Monday, April 20

‘டீமன்’ -விமர்சனம்

திரைத்துறையில் இயக்குனராக வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் வலம் வரும் இணை இயக்குநரான விக்னேஷ் சிவன் (சச்சின்) ஒரு பட தயாரிப்பாளரிடம் ஹாரர் கதையினையும் சொல்லி வாய்ப்பு பெற்றுவிடுகிறார் அந்த படத்துக்கான முன்பணி வேலைகளை துவங்க தனியாக அபார்ட்மெண்டில் ஒன்றில் தங்குகிறார். அந்த வீட்டில் அவர் தூங்கும்போதெல்லாம் பயமுறுத்தும் கனவுகள் வந்துகொண்டே உள்ளது இதனால் விக்னேஷ், தொடர்ந்து வரும் இந்த கனவுகளுக்கான காரணத்தையும் அங்கு இதற்கு முன் என்னதான் நடந்தது ? என்பதையும் கண்டறிந்து கொள்ள முயலுகிறார் , அதன் பின்பு என்ன நடந்தது ? என்பதே `டீமன்’ படத்தின் கதை.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் இப்படத்தை நன்கு உருவாக்கியுள்ளார் இவரது காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் ரோனி ரஃபேலின் இசையும் , கார்த்திக் நேத்தா பாடல் வரிகளும் அமைத்துள்ளன . ஆர்.எஸ். ஆனந்த குமாரின் கேமரா படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற நகர்வுகளை திறம்பட பதிவாக்கியுள்ளது

‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் கதையின் நாயகனாய் நன்கு நடித்துள்ளார். ஏற்கனவே ‘ஜெயில்’ ‘தேன்’ படங்களில் நன்கு அறியப்பட்டிருந்த அபர்நதி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணம் இயல்பாக நடித்துள்ளனர்.

ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘டீமன்’ இளைய தலைமுறை பார்வையாளர்களை கவரும்

Spread the love