வான் மூன்று விமர்சனம் Vaan Moondru -review
சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் AMR முருகேஷின் ‘வான் மூன்று’ படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 'வான் மூன்று' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது.
காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞனும் (ஆதித்யா பாஸ்கர்) காதலன் தன்னை விட்டுச் சென்று விட்டதாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணும் (அம்மு அபிராமி) ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள், இந்த சூழ்நிலையில் அங்கே அந்த இளைஞனுக்கு அந்த இளம் பெண் மீது காதல் ஏற்படுகிறது.
(லீலா சாம்சன்) மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பொருளாதாரமின்றி அவதிப்படும் கணவர் ( டெல்லி கணேஷ்),
இப்படி மூ...
Uncategorized
‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
G. மணிக்கண்ணன் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது.
தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை 'பார்க்கிங்' திரைப்பட கேமரா...
டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”
டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் !
தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும், முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில், உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக இப்படத்தை உருவாக்குகிறார். உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கிரமாத்து பின்னணியில், மாறுபட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
இப்படத்தில் நாயகனாக தொப்ப...
தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் தமிழ் தாய் விருதுகள் என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தவிருக்கிறார்கள்.
தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும் குறும்பட போட்டி .பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் மொழியில் ஐந்து முதல் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் குழந்தை பெண்களின் முன்னேற்றம் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு சிறந்த மூன்று குறும்படங்கள் ,சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ,சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதுகளும் ,பொது பிரிவில் சிறந்த மூன்று குறும்படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிக்கு நடுவர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ், இயக்குனர் யார் கண்ணன், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
வெற்றி பெறும் அனைவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்...
லவ் டுடே படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் -பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த லவ் டுடே குழு
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது.
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, சிஎஃப்ஓ ரங்கராஜன், நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சிஎஃப்ஓ ரங்கராஜன், "நல்ல கதையம்சம் கொண்ட ப...
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டை முன்னிட்டு, சென்னை முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ஹரா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்....
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!
கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” விரைவில் திரையில் !!
நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.
ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின்...
இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத இன்டர்வெல் காட்சி ; சாமான்யன் -ராமராஜன்
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்று...
விஜயகாந்த் நடித்த “கண்ணுபடப் போகுதய்யா”பட இயக்குநர் பாரதி கணேஷ் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்
சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜயகாந்தை வைத்து "கண்ணுபடப் போகுதய்யா" என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது, “சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார். இந்தப்படத்த...
