சென்னை எடிஷன் கேமிங் திருவிழாவை கிட்டத்தட்ட 17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ளது!
உலகளாவிய அறிவுசார் சொத்து மற்றும் சமூக கட்டமைப்பாளரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30–31 அன்று சென்னை வர்த்தக மையத்தில் கேமிங் திருவிழாவின் முதல் பதிப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் கேமிங், அனிமே, ஸ்டாண்ட்-அப் காமெடி, காஸ்ப்ளே, கலாச்சாரம் மற்றும் இசை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விளையாட்டு முதல் காஸ்ப்ளே, நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என சென்னை வர்த்தக மையமே திருவிழாக்கூடமாக மாற்றியது. அங்கு ரசிகர்கள் வெறுமனே பங்கேற்கவில்லை. நிகழ்வை அவர்கள் கொண்டாடி, ஒன்றாக நினைவுகளை உருவாக்கினர்.கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு ஒன்று கூடினர். இந்த நிகழ்வு மூலம் கேமிங் மற்றும் அனிமே வெறுமனே பொழுதுபோக்கிற்...









