இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’
*இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'*
VV Entertainments நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
பெண்கள் மாண...









