Saturday, October 17

சினிமா

‘தொடாதே ‘ இசை வெளியீட்டு விழா

‘தொடாதே ‘ இசை வெளியீட்டு விழா

சினிமா
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார், பிஆர்ஓ கோவிந்தராஜ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இய...
இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

சினிமா
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி. "மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்கள...
பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ்

பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ்

சினிமா
ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கே ஜி எஃப் 2' படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள். ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்...
தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் -அருண் விஜய் உற்சாகம்

தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் -அருண் விஜய் உற்சாகம்

சினிமா
''அமேசான் ஒரிஜினல் திரைப்படமான 'ஓ மை டாக்' எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்'' என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார். பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ஓ மை டாக்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது. மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார...
ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

சினிமா, செய்திகள்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, பிரபல பாடகர் வேல்முருகனின் மூத்த மகள் ரக்க்‌ஷனா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்க்‌ஷனா இதை முறியடித்துள்ளார். பத்தே வயதான ரக்க்‌ஷனா ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்க்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்க்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார். திமுக இளைஞர் அணி செய...
இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

சினிமா
நடிகர் பிரசாந்த் வெளியிட்ட டைட்டில் "டூ ஓவர்" நடிகர் பிரசாந்த் 'டூ ஓவர்' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டரை வெளியிட்டார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் சரவணன் "டூ ஓவர்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஷார்வி எழுதி இயக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான திரைப்படம் டூ ஓவர். படித்தவர் ஆனால் வேலையில்லாதவர் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை. ஒரு மனிதனின் வேலையுடனான உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு கே.வி.செந்தில் இணை இயக்கம் ஏ.பி.சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது 'டூ ஓவர்'!...
 ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

 ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

சினிமா
நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.  ...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது !

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது !

சினிமா
நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெ...
 இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  பொழுதுபோக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது

 இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  பொழுதுபோக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ “ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது

சினிமா
"ஓ மை டாக்” குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் நம்பமுடியாத அளவிற்கு புத்தம் புதிய, எண்ணற்ற பிரத்யேகப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல், விளம்பரம் இல்லாமல், அமேசான் மியூசிக் மூலமாக இசை, இந்தியாவின் முக்கிய தயாரிப்புகளை துரிதமாக வெளியிட்டும், பெரிய வியாபார பேரங்கள், பிரைம் ரீடிங் மூலமாக எல்லையற்ற கல்வி விஷயங்கள்,  பிரைம் கேமிங்கில் மொபைல் கேமிங் இவை அனைத்தும்...
Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

Giant Music வழங்கும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல் “ஆசை அலை மீறுதே” !

சினிமா
இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்கள் சமீப காலங்களில் ரசிகர்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பல பாடல்கள் சார்ட்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், ‘ஆசை அலை மீறுதே’ அந்த வரிசையில் தற்போது  இணைந்துள்ளது.  இந்தப் பாடலுக்கு பரத் ராகவன் இசையமைத்துள்ளார், கல்பனாவின் வரிகளில்  ரக்‌ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளார், 'அடங்கமறு புகழ்' ராஜா ருத்ரகோடி மற்றும் சதரூப நஹா ஆகியோர் பாடலில் முதன்மை கலைஞர்களாக இடம்பெற்றுள்ளனர். இஷான் இப்பாடலை உருவாக்கி இயக்கியுள்ளார். வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஒரு பெண் தன் காதலன்  இல்லாத தருணத்தில் அடையும் உணர்ச்சிக் கொந்தளிப்பை இந்தப் பாடல் ஆழமாகச் சொல்கிறது. காதலன் மீதான அதீத அன்பாகத் தொடங்குவது, பேரழிவு தரும் உச்சமாக மாறுகிறது.காதர் சரஸ்வதி இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் இஷான் சன் மியூசிக் மற்றும் பெப்பர்ஸ் டிவியில் விஜேவாகவும், அதன் பி...