திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.
திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய M.ஜானகிராமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர் கொடைக்கானல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் பிற முன்னனி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். . மேலும் இப்படத்தில் ‘இயக்குனர்’ பாலாஜி மோகனும், நட...









