லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட...









