முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் ” மனோகரி ” படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று துவங்கியது.
மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது " சிட்தி " இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி " என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராதே மணியின் மகனான ராஜ்குமார் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார் அவர் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதி...









