Thursday, June 4

சினிமா

 இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

 இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

சினிமா
உலகம் முழுக்க புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 80 வருடங்களாக நடந்து வரும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமிழ் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் உன்னத படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கிடா”. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒ...
சபரிமலை மேல் சாந்தி, “ஶ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்!

சபரிமலை மேல் சாந்தி, “ஶ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்!

சினிமா
ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்". தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தை நட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில...
டிஸ்னி+  ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது

டிஸ்னி+  ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது

சினிமா
சென்னையில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களும் இந்த கான்செர்ட்டை பார்த்து ரசித்தனர். இந்தியாவில் ஒரு இசை நிகழ்ச்சி இவ்வாறு நேரடியாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி அனிருத்துடன் ரசிகர்கள் இணைந்து கொண்டாடும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. பாடகி ஜொனிடா காந்தியும் இந்நிகழ்ச்சியில் இணைந்து, அனிருத் கூட்டணியில் வெளியான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக இசைத்து, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த...
நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ புராஜெக்ட் கே’ படக்குழு

நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ புராஜெக்ட் கே’ படக்குழு

சினிமா
நடிகர் பிரபாஸின் 'புராஜெக்ட் கே' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ' புரொஜெக்ட் கே'. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ...
பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!

பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!

சினிமா
68 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மலர் வெளியிடுவது வழக்கம்.அம்மலர் தமிழ் திரையுலகில் வெகு பிரசித்தமும் கூட ! அந்த வகையில் இந்த 2022ம் ஆண்டின் தீபாவளி பண்டிகையை ஓட்டி வெகு சிறப்பாக தயாராகி வந்த 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தீபாவாளி மலர் - 2022 புத்தகத்தை , பொக்கிஷத்தை ., ஒரு பக்கம் பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட அவரது மகன் இயக்குனர் கலா பிரபு பெற்றுக்கொள்ள., மற்றொரு பக்கம், திரைக்கதை மன்னன் எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள ., இன்னுமொரு பக்கம் மனதை வருடம் பாடல்களைத் தொடர்ந்து தந்து வரும் 'மெலோடி கிங்' இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் D.R.பாலேஷ்வ...
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ அப்டேட்

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ அப்டேட்

சினிமா
கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர் ‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வ...
‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

சினிமா
ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான த...
 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

சினிமா
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு 'NBK 107' என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர். 'வீர சிம்ஹா ரெட்டி' எனும...
ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

சினிமா
'தி ஐ' எனும் சர்வதேச திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் 'தி ஐ' எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், 'டிரெட்ஸ்டோன்' எனும் ஹாலிவ...
ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

சினிமா
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம்மேக்கர் K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் - கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் "13" டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள "13" படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது என...