மஹா மூவிஸ் தயாரிப்பில் அனில் கட்ஸ் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மஹா மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தை மகேந்திரநாத் கொண்டலா தயாரிக்க அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மஹரிஷி கொண்டலா இந்தப் படத்தை வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் படக்குழு, படம் பற்றி பல விஷயங்களை பேசியுள்ளது.
படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார் கூறுகையில், “எங்கள் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களு...









