Wednesday, June 17

சினிமா

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

சினிமா
சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' நீ போதும் எனக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் கா...
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும் நாகசைதன்யா,வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும் நாகசைதன்யா,வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது

சினிமா
நாக சைதன்யா மற்றும் திறமையான இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்- தெலுங்கு பைலிங்குவல் படமான 'கஸ்டடி' மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா பிறந்தநாளன்று படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டனர். போலீஸ் அதிகாரியாக நாகசைதன்யாவின் இந்த அதிரடியான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்போது உலகம் முழுவதும் 'கஸ்டடி' திரைப்படம் மே மாதம் 13,2023-ல் நீண்ட கோடை விடுமுறையை திட்டமிட்டு வெளியிட இரு...
தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி – இயக்குநர் பாரதி ராஜா!!

தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி – இயக்குநர் பாரதி ராஜா!!

சினிமா
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது.. தங்கர் பச்சான் பேசும்போது, “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்து விடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. ஆனால், அதுவும் நல்லதுக்குத்தான். பாரதிராஜா ஐயாவின் உடல்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் முன்பே வருகிறேன் என்று கூறினார். ஆனால், நன்றாக ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டேன். இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அ...
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

சினிமா
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது. எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றி சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வுல்ஃப் படத்தை இயக்கி வரும் வினு வெங்கடேஷ் கூறுகையில், "இப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நட...
’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – விமர்சனம்

’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – விமர்சனம்

சினிமா
கல்லூரியில் படிப்பை முடித்த கதையின் நாயகனுக்கு(ஸ்ரீ ) வேலை கிடைக்காமல் போகவே தனக்கு கிடைத்த சிறிய வேலைகளை செய்து வரும்போது, ஒரு பெரிய செல்வந்தரான பெரியவர் ஒருவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் வேலைகிடைக்கிறது அந்த வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை ஏராளமாக பணம் கொடுத்து வாங்க பலர் வாங்க தயாராக இருப்பதையும் அறிந்துக்கொண்டு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி சம்பாதிக்கும் வேலையில் அவரிடமுள்ள பணத்தை பறிக்க அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தியும் திட்டமிடுகிறார். இவைகள் மட்டுமின்றி அந்த விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்சும் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நாயகனின் நிலை என்ன ? அதன் பிறகு அங்கு என்ன நடந்தது? என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை பூர்த்தி செய்கிறது ‘பு...
இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’-  Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’-  Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

சினிமா
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மாரிசெல்வராஜ் 'நூடுல்ஸ்'- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் S.J. ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜூக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்: T. வினோத் ராஜா MFI உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷூடன் ராபர்ட் சற்குணம் இணைந்து பின்னணி இசை அமைத்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணன் MK படத்தின் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். படத்தொகுப்பு:...
ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சினிமா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (27.12.2022) சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் வேலை பார்த்து இருக்கிறேன். இதை நான் ஸ்பெஷலாக பார்க்கிறேன். இயக்குநர் சரவணனுடன் இது ஹாட்ரிக் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் பல வெர்ஷன்கள் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டே இருந்ததால் இந்தப் படம் எங்களுக்கு ஸ்பெஷல் என்றுதான் சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக் கொள்வதற்கான இடத்தையும் இந்த படம் எங்களுக்கு கொடுத்தது. அதை பெரிய திரையில் பார்க்கும்போது கூடுதல் சந்தோஷமாக இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ...
இறப்பு கம்பீரமானது என சொல்லும் படம் ‘டியர் டெத்’

இறப்பு கம்பீரமானது என சொல்லும் படம் ‘டியர் டெத்’

சினிமா
SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் பற்றி தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜன் கூறும்போது, “என்னுடைய தாத்தா பி.எஸ் மூர்த்தி கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்தவர். தமிழில் போலீஸ்காரன் மகள், மாலையிட்ட மங்கை உள்ளிட்ட நூற்றுக்க...
உடன்பால்- திரைப்பட விமர்சனம்

உடன்பால்- திரைப்பட விமர்சனம்

சினிமா
இந்த conceptல பல படங்கள் வந்து இருந்தாலும் எப்பவும் நடை முறைக்கு ஒத்துப்போற கருதான் ..இந்த படத்தோட கதை,  எந்த அளவுக்கு ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும்படியாகவும் சொல்லப்படுகிறதோ அந்த கதை வெற்றிஅடையும்  ,உடன்பாலும் அதில் உள்ளடங்கும்.... கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிற சூழ்நிலையில இருக்குற அண்ணன் தங்கச்சி ...தங்களோட பிரச்சனை தீர வீட்டை வித்துடலான்னு அப்பா(சார்லி )கிட்ட சொல்லுறாங்க அதுக்கு அவர் முடியாதுனு சொல்லிட்டு போறாரு..அதை மறுக்கும் அப்பா வழக்கமாக செல்லும் ஒரு complexக்கு செல்கிறார்..அங்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த complex இடிந்து விழுந்துடிச்சினு பிளாஷ் நியூஸ் வருது...அந்த நியூஸில இறந்தவங்க குடும்பதுக்கு 20 இலட்சம் தருவதாக அரசாங்கம் அறிவிக்குது .......தங்களோட அப்பா அந்த விபத்துல சிக்கிடாருன்னு நினச்சு வருத்தப்படுறதா, இல்ல வரபோற பணத்தை எப்படி பங்கு போடுறதான்னு நினைக்கும் பசங்க ஒ...
சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

சினிமா
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார். தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து பல்வேறு தரப்பினர் இடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “இந்த சமூகத்தில் ...