Thursday, June 18

சினிமா

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் “ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3”

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் “ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3”

சினிமா
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் "ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3"   ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்...
Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் என இயக்குநர் விவேக் கே கண்ணன் தெரிவிக்கிறார்

Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் என இயக்குநர் விவேக் கே கண்ணன் தெரிவிக்கிறார்

சினிமா
பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் Quotation Gang படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து விவேக் கே கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகதான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம்". " இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது ஆனால் Quotation Gang உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும். இது ஆக்‌ஷன் பற்றிய கதை கிடையாது ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது. சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்லிங்க் எமோஷனல் ட்ராமாவாக உருவாக்கி உள்ளோம். இந்த கதையை கோவிட் காலத்திலும் படமாக்கி உள்ளோம். ஏற்கனவே, நான் பிரியாமணிய...
 விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த “பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் SP சினிமாஸ் பெற்றுள்ளது.

 விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த “பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் SP சினிமாஸ் பெற்றுள்ளது.

சினிமா
SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் ...
‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது

சினிமா
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி வெளியான போது பல இதயங்கள் உடைந்து போனது. ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளாக அறியப்பட்டது. இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை நேரத...
வாரிசு படத்தில் துணிச்சலான  முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து முத்திரையை பதித்த கணேஷ் வெங்கட்ராம்

வாரிசு படத்தில் துணிச்சலான முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து முத்திரையை பதித்த கணேஷ் வெங்கட்ராம்

சினிமா
நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!!! விஜய் நடித்த வாரிசு படத்தில் துணிச்சலான மற்றும் சக்திவாய்ந்த முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய விதமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இதுபற்றி கணேஷிடம் கேட்டபோது, ​​ "படத்தில் தொழில் அதிபராக நடித்ததால்,நிஜ தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் பேசி பழக ஆர்வம் காட்டினார்கள். என்னை வேறு பரிமாணத்தில் பார்த்தார்கள், ஒரு நடிகராக அது எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றார். பல மூத்த நடிகர்கள் படத்தில் இருந்தாலும், கணேஷ் தனது முத்திரையை பதித்துள்ளார். 2023-க்கு ஒரு சிறந்த தொடக்கமாக, அவர் மேலும் கூறுகிறார் :- "நான...
கலைஞரின் ‘ரோமாபுரிப் பாண்டியன்’ அனுபவங்கள்: நடிகர் ஓ.ஏ.கே. சுந்தரின் மலரும் நினைவுகள்!

கலைஞரின் ‘ரோமாபுரிப் பாண்டியன்’ அனுபவங்கள்: நடிகர் ஓ.ஏ.கே. சுந்தரின் மலரும் நினைவுகள்!

சினிமா
தமிழ் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பரிச்சயமான முகம் ஓ.ஏ.கே.சுந்தர்.சுமார் நூறு படங்களில் பெரும்பாலும் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரங்களிலும் சிறுபான்மையாக நேர்நிலைப் பாத்திரங்களிலும் நடித்திருப்பவர்.எல்லா வகைமையிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இவர் இருப்பவர்.வணிகரீதியில் வெற்றி பெற்ற பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.அண்மையில் வந்த 'யானை', 'விருமன்' போன்று தொடர்ந்து வெற்றிப் படங்களில் தோன்றி வருகிறார். கலைஞரின் கைவண்ணத்தில் உருவான 'ரோமாபுரிப் பாண்டியன்' தொலைக்காட்சித் தொடரிலும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'மகாபாரதம்' தொடரிலும் நடித்து தொலைக்காட்சி வழியே ஒவ்வொரு இல்லத்தையும் தேடிச் சென்றடைந்திருப்பவர். 'பொன்னியின் செல்வன்' அண்மைக்காலத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வந்திருக்கும் படம். அந்தப் படத்தில் ஓஏகே சுந்தர் நடிக்கவில்லை என்றாலும், 'பொன்னியின் செல்வன்' இவர் வாழ்க்கையோடு கலந்து தொடர்...
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு

சினிமா
பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் 'ஜெயம்' ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் 'இறைவன்' திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, "'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 'இறைவன்' படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. 'ஜெயம்' ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிற...
“என் ஐந்து வருட இடைவெளியை வாரிசு ஒரு படமே நிரப்பி விட்டது” – மனநிறைவை வெளிப்படுத்திய ஷாம்

“என் ஐந்து வருட இடைவெளியை வாரிசு ஒரு படமே நிரப்பி விட்டது” – மனநிறைவை வெளிப்படுத்திய ஷாம்

சினிமா
தமிழ் திரையுலகில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியாக உருவான 12B படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். கடந்த 20 வருடங்களில் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஷாம் இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாம். தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக படத்தில் நடித்த ஷாம் கதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வரவேற்பும் திரையரங்குகளில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் ப...
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்  அவரது  திருவுருவ படத்திற்கு மரியாதை

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு, இன்று 17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ் மற்றும் M.A. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்....
மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர் விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!!

மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர் விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!!

சினிமா
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவர...