Thursday, June 18

சினிமா

 ‘தாதா 87’, ‘பவுடர்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த புதிய திரைப்படம்

 ‘தாதா 87’, ‘பவுடர்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த புதிய திரைப்படம்

சினிமா
திருநங்கைகளின் காதலை சொல்லும் 'தாதா 87', பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்ட 'பவுடர்', பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் 'ஹரா' போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார். சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம். இந்த தசை சிதைவு ந...
*இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்!

*இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்!

சினிமா
ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்! தமிழ் திரையுலகில் அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட...
பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! “கருமேகங்கள் கலைகின்றன”

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! “கருமேகங்கள் கலைகின்றன”

சினிமா
பாரதிராஜா,யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன் ,அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து வரும் 'கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றன. இதன் 5பாடல்காட்சிகளை இதன் இசை அமைப்பாளார் ஜீ.வி.பிரகாசிடம் போட்டு காட்டியுள்ளார் தங்கர் பாச்சான். பாடல்களை பார்த்து வியந்து போனார் ஜீவி. #அழகியை பார்த்து வியந்திருக்கிறேன். நம்ம இசைக்கு இப்படி ஒரு வாழ்வியல் படம் கிடைக்காதா என்று ஏங்கியதுண்டு. அது இந்த 'கருமேகங்கள் கலைகின்றன' படம் மூலம் நிறைவேறியதாக கருதுகிறேன் ' என்றாராம். அவரது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக முழு மன நிறைவும், பெருத்த மகிழ்வும் அளிப்பதாகக் கூறினார். மனம் வருடும் இன்னிசைப் பாடல்களும்,காட்சிப் படிமங்களும் என் படைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களின் எண்ணங்களை ஈடு செய்யும் என நம்புகிறேன்! என்றார் ஜி.வி. ஜி.வி.பிரகாஷ் - வைரமுத்து இணைந்து 5பாடல்களை கொடுத்துள்ளனர். - தங்கர் ...
 பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

 பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சினிமா
பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. 'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து வேடியப்பன் கூறுகையில், "இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக...
லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

சினிமா
'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செயற்கை நுண்ணறிவை பற்றிய சிந்தனை கொண்ட படைப்பு தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்- டாக்டர் பிரபு திலக் லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் - தயாரிப்பாளர் குமார் ''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' திரைப்படம் உருவாகி இருக்கிறது' என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உ...
“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

சினிமா
“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!! எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "அரியவன்". மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது… இப்படத்தில் வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை, ஆனால் இந்த...
6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

சினிமா
ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும், “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மதயானைக்கூட்டம்” !! Lights On Media வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. Kpr institution coimbatore Fessta '23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானை...
மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!

சினிமா
'பலாப்பழம்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்! தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான 'தமிழ் தேசிய மாடல்' மன்சூர் அலிகான்! மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு"! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்! 'சரக்கு' படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்! மன்சூர் அலிகானின் "சரக்கு"! இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!...
இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

சினிமா
" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இயக்குனர்கள் சங்க தலைவர் R. K. செல்வமணி மற்றும் செயலாளர் R.V. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர். படத்தின் இயக்குனர் மோகன். G க்கு ச...
வேகமாக வளர்ந்து வரும் L.G.M

வேகமாக வளர்ந்து வரும் L.G.M

சினிமா
விரைவான படப்பிடிப்பில் 'எல். ஜி. எம்' தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று...