*பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்*
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லீடர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லீடர்' திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கையாண்டிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது....









