’சுழல் 2’ – விமர்சனம்
முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணித்து ரசிகர்களை கவரும் வண்ணம் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் - சீசன் 2’வும் உள்ளது .
முதல் சீசனின் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம் பெற்றவர்களான காவல் உதவி ஆய்வாளர் சர்க்கரை (கதிர்) மற்றும் நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இந்த சீசனிலும் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.முதல் பாகத்தின் முடிவில் நந்தினி சிறைக்குச் செல்வதோடு தொடர் முடிந்தது.இரண்டாவது சீசனில் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான செல்லப்பா(லால்), அவரது வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கினை சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் கொலை பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காக சூழலில் , வெவ்வேறு காவல் நிலையங்களில் லாலை கொலை செய்ததாக சில இளம் பெண்கள் சரண் அடைகிறார்கள், அந்த பெண்கள் ஒரே கொலை வழ...




