Wednesday, September 23

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்- தமிழ் திரைப்பட விமர்சனம்

ஸ்ட்ரீட்லைட் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை ஜோ ஜியோவானி சிங் எழுதி இயக்கியதோடு மட்டுமல்லாது , படத்தில் முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார் .

முதன்மையாக சிங்கப்பூரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் முக்கியமான மைய கருப்பொருள்களை உள்ளடக்கிய வடிவம் கொண்டது அதன்படி இப்படத்தின் கதையானது மனித உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் டிராவல் ஏஜென்சிகளில் பணிபுரியும் சில நேர்மையற்ற பணியாளர்களால் பாதிக்கப்படக்கூடிய பயணிகளை சுரண்டுதல். போன்ற அம்சங்களை கொண்டுள்ளது

.இந்த படத்தில் ஜோ ஜியோவானி சிங்கின் கதாபாத்திரமும் அதை அவர் வெளிப்படுத்திய விதமும் நன்குஉள்ளது , சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு எழில் மிகு சிங்கப்பூரை அழகாக படம்பிடித்து பதிவு செய்துள்ளது,இசையினை ப்ரவீண் விஸ்வாமாலிக்கும், படத்தொகுப்பை ராம் மணிகண்டனும் கதைக்கும் காட்சிக்கும் ஏற்ற வகையில் கொடுத்துள்ளார்கள் .

படத்தில் ரியோ ராஜ், ஜோ ஜியோவானி சிங், மூனிலா, ஜெய்னீஷ், குணாளன் மற்றும் பலர் உட்பட பலர் நடித்துள்ளார்கள் அவர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கதைக்குதேவையான அளவுக்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன.

Spread the love