Boss Movies சார்பில் விஜய் K செல்லையா தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ரங்கா”. உலகமெங்கும் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரங்கா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Boss Movies சார்பில் விஜய் K செல்லையா தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரங்கா”. பரபர கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினத் பட வெளியீட்டை ஒட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில்
கலை இயக்குநர் அருண் பேசியது
இது எங்கள் டீமில் எல்லோருக்கும் முக்கியமான படம் . நண்பர் வினோத்தின் பார்வை மிக வித்தியாசமாக பிரமாண்டமாக இருக்கும், அவர் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் தரும் இன்புட் துல்லியமாக இருக்கும். காஷ்மீர் உடைந்த பாலம் ஒன்றை உருவாக்கி ஷீட் செய்தோம். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது உங்களுக்கு பிடிக்குமென்று நம்புகிறேன் நன்றி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது
வினோத் நேபாளி படத...









