நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி – டாக்டர். பிரியா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவருக்கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார்.
இந்த நிலையில், கோபிநாத் ரவிக்கும், சென்னையை சேர்ந்த டாக்டர்.பிரியா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை ஐடிசி நட்சத்திர ஓட்டலில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் சரத்குமார், சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் மகேந்திரன், சுரேஷ் சக்கரவர...









