தளபதியை சந்தித்த புரட்சி தளபதி….
தளபதியை சந்தித்த புரட்சி தளபதி....
நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும் “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருவதை தொடர்ந்து நடிகர் ''தளபதி" விஜய் அவர்களை சமீபத்தில் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.
புரட்சி தளபதி விஷால் - தளபதி விஜய் சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் கண்டு மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோ...









