Wednesday, April 29

Author: admin

 தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில...
Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சினிமா
Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்".  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று கூறினேன். அது போலப் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பிணைப்பு உருவானது, இந்த படத்தில் நான் பல விஷயங்க...
 பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

 பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

சினிமா
அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றஇந்தத் திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் பிரத்யேகமாக திரையிடப்படும். மும்பை — மே 02, 2023—அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், மாண்டலே பிக்சர்ஸ் மற்றும் அஃப்லெக் மற்றும் மேட் டாமோனின் ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டியின் முதல் திட்டமான பென் அஃப்லெக்கின் ஏஐஆரின் டிஜிட்டல் பிரீமியர் பிரைம் வீடியோவில் மே 12 முதல் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என இந்தியாவின் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ இன்று அறிவித...
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. முரளி ராமசாமி மற்றும் அவரின் அணிக்கு  மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. முரளி ராமசாமி மற்றும் அவரின் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சினிமா
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. முரளி ராமசாமி மற்றும் அவரின் அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் சினிமாவின் தாய் சங்கமாக, பாரம்பரியமாக இயங்கி வருகிறது. அதன் தலைவராக, உறுப்பினர்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. முரளி ராமசாமி அவர்களுக்கும், பொருளாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கும், செயலாளராக மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள திரு.R. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. S. கதிரேசன் அவர்களுக்கும், துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. G.K.M. தமிழ் குமரன் மற்றும், திருமதி அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S. சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும், மற்றும் தேர்வ...
நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

சினிமா
இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை. பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) வை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) கூ...
 *’பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது*

 *’பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது*

சினிமா
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2 - ஆன்டி பிகிலி' டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், 'பிச்சைக்காரன்' படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

சினிமா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், 'நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 2023-2026 ஆண்டுகள் வரை பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் நீதியரசர்கள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,111 வாக்குகள் பதிவானது. இதன் படி "நலம் காக்கும் அணி'' சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 'தேனாண்டாள்' முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் 651 வாக்க...
பல அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

பல அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

சினிமா
பல அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட'சமூக விரோதி' டைட்டில் லுக் !தொல். திருமாவளவன்,தோழர் க. பாலகிருஷ்ணன்,வன்னி அரசு,விஜய் சேதுபதி, சசிகுமார் , சமுத்திரகனி, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, இயக்குனர் ராஜீ முருகன்,வாணி போஜன் சினேகன், கலையரசன், போஸ் வெங்கட் என 30 பேர் வெளியிட்ட 'சமூக விரோதி 'டைட்டில் லுக்! தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் 'சமூக விரோதி 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தனது முதல் படமாக 'பொது நலன் கருதி' படத்தினை கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக எடுத்து பாராட்டப்பட்டவர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு- ஜிஜூ மோன் P.S.,...
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

சினிமா
 ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர். எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது. மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு - பிரசன்னா GK. தயாரிப்பு வடிவமைப்பு ...
”நான் சென்னை பையன்”- ‘விரூபாக்‌ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ் -விரூபாக்‌ஷா  பத்திரிகையாளர் சந்திப்பு

”நான் சென்னை பையன்”- ‘விரூபாக்‌ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ் -விரூபாக்‌ஷா பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா
விரூபாக்‌ஷா பத்திரிகையாளர் சந்திப்பு ''நான் சென்னை பையன் தான். 'விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்'' என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார். தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'காந...