சிறுவன் சாமுவேல் -விமர்சனம்
எவ்வளோவோ சினிமாக்கள் வருடம்தோறும் வந்தாலும் முழுக்க குழந்தைகளுக்கான சினிமாக்கள் வருவது என்பது அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றுதான்,அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் இந்த சிறுவன் சாமுவேல்.
கதையின் நாயகனாய் உள்ள சிறுவன் சாமுவேல், சாமுவேலின் தோழனாக ராஜேஷ். இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில்மிகவும் ஆர்வமாய் இருப்பவர்கள்.இவர்கள் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, பணக்காரச் சிறுவன் ஒருவன் அசல் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு வர அதை பார்க்கும் நண்பர்களுக்கும் அப்படி ஒரு கிரிக்கெட் மட்டையை தா ங்களும் வாங்கி விட என்ற ஆசை பிறக்கிறது., ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை (Cricket bat) கிடைக்குமென்ற செய்தியை சாமுவேல் அறிகின்றான் .அந்த மட்டையை வாங்க பல வழிகளில் முயற்சி செய்யும் சாமுவேலின் அந்த மட்டை வாங்கும் கனவு நி...









