ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’. பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஏஜென்ட் கண்ணாயிரமாய் சந்தானம் நடித்துள்ளார் . சந்தானம் (கண்ணாயிரம்), மரணம் அடைந்த அம்மாவைக்காண கோயம்புத்தூரில் உள்ள தனது கிராமத்திற்கு பல சிரமங்களுக்குகிடையில் வந்து சேர்ந்தாலும் தாயின் முகத்தைக் காண முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது கடைசியாக ஒரு முறைகூட தாயின் முகத்தை பார்க்க முடியவில்லையே என்று வருந்தும் சந்தானத்திற்கு, சொத்துக்கள் சம்ப சம்பந்தமாக அதே ஊரில் சில நாட்கள் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன.அந்த இறப்புகளின் பின்னணி, கொலையா என ஆராயும் முயற்சியில் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக சந்தானம் செயல்படுகிறார். இப்படிப்பட்ட வேளையில் ஒரு கொலையில் சந்தானத்தை சந்தேகித்து கைது செய்கின்றது போலீஸ். சிறை லாக்கப்பில் ஒருவரை சந்திக்கும் சந்தானம் அவரது கதையினை கேட்ட பின் ஏஜெண்ட் கண்ணாயிரமாக மாறுகிறார் அதன் பின் நடந்தவை என்ன?சந்தானத்துக்கு டிடெக்டிவாக வெற்றி கிடைத்ததா ? என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாய் சந்தானம் தன்னுடைய வழக்கமான பாணியை விட்டுவிட்டு,ஆக்ஷன் செண்டிமெண்ட் என புதிய பரிமாணத்தில் பயணித்தாலும் அவ்வப்போது சில சமயங்களில் தனக்கே உரித்த காமெடி கவுண்ட்டர் டயலாக்குகளையும் பயன்படுத்தியுள்ளார் அந்த யுக்தி ரசிகர்களை நன்றாகவே ஈர்த்துள்ளது.
முனீஸ்காந்த்,புகழ் , ரெடின் கிங்ஸ்லி, இந்துமதி குரு சோமசுந்தரம் ,ராமதாஸ், போன்றவர்களும் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்கள் .நாயகி ரியா சுமன் சந்தானத்திற்கு உதவியாக இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .
தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அஜய்யின் படத்தொகுப்பும் தங்களது பங்களிப்பில் குறைவின்றி உள்ளன
சஸ்பென்ஸ், திரில்லர் கதைக்களத்தில் படத்தை மனோஜ் பீதாவின் இயக்கியுள்ளார், தெலுங்கில் வெற்றி பெற்ற படக்கதையினை அப்படியே திரையாக்கம் செய்யாமல் தமிழில் சில மாற்றுங்கள் செய்தும் புதிய பணியில் சந்தானத்தை மாற்றியும் படத்தை உருவாக்கியுள்ளார்.
காமெடி பாணியிலிருந்து ஆக்ஷனுக்கு மாறி பயணிக்கும் சந்தானத்தின் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம் இளைஞர்களின் பொழுது போக்கு படமாய் நிச்சயம் அமையும் .