Saturday, December 6

Ace- திரை விமர்சனம்

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ ( ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், மற்றும் நடித்திருக்கிறார்கள். கரண் B ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் C.S படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் தயாரித்திருக்கிறார்.இந்தியாவில் இருந்து வேலைக்காக,விஜய் சேதுபதி மலேசியாவுக்கு போறாரு, அவரை ஏர்போர்ட்ல ரிசீவ் பண்ணும் , யோகி பாபு அவரை தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போயி அவர் கூடவே தங்கவும் வைக்கிறாரு, அந்த ஊர்ல ரெஸ்டாரன்ட் நடத்திட்டு இருக்குற திவ்யா பிள்ளை, பேங்க்ல கடன் வாங்கி அதை திருப்பி கட்ட முடியாம இருக்கறதோட, ரெஸ்டாரன்ட்ல வருமானமும் இல்லாததுனால அந்த ரெஸ்டாரன்ட பெயரளவுக்கு நடத்திக்கிட்டு இருக்காங்க, தன்னை ஒரு பிசினஸ்மேன்னு சொல்லிக்கிற யோகி பாபு ,திவ்யா பிள்ளை கிட்ட விஜய் சேதுபதிய அறிமுகப்படுத்தி வச்சி வேலைக்கு சேர்த்துக்க சொல்றாரு, விஜய் சேதுபதியும் அந்த ரெஸ்டாரண்டில் வேலை செய்யுறாரு , இந்த சூழ்நிலையில விஜய் சேதுபதியும் ருக்மணியும் ஒரேநாளில் சில இடங்களில் பாக்குறாங்க ,அப்புறம்தான் தெரியுது ரெண்டு பேருமே ,ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டுலதான் இருக்காங்கன்னு .

ருக்மணியோட வளப்பு தந்தையான பப்லு பிரிதிவிராஜ் ,வீட்டிலேயே மது ,மாது என்று ஜாலியா இருக்கிறாரு, ,இது பொறுக்க முடியாத ருக்மணி,பப்லு பிரிதிவிராஜ வீட்டை விட்டு வெளிய போக சொல்றாங்க, எனக்கான பணத்தையும் பங்கையும் சேர்த்து கொடுத்தால், நான் வீட்டை விட்டு வெளியில போறேன்னு சொல்றாரு பப்லு பிரிதிவிராஜ்,இதுக்கு சம்மதம் சொல்ற ருக்மணி பல வேலைகளை செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிக்கிற காசை பப்லு பிரிதிவிராஜ்கிட்ட கொடுக்குறாங்க, இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி அறிமுகம் ஆறுதலா மாற, கொஞ்சம் கொஞ்சமா காதலாகவும் மாறுது ,ருக்மணி விஜய் சேதுபதிகிட்ட சொல்லுற விஷயத்துக்காக ,யோகி பாபு கிட்டபணம் கேட்குறாரு , அதுவரைக்கும் பிசினஸ்மேனன் சொல்லிட்டு இருக்குற யோகி பாபு ,கடைசில குப்பை பொறுக்குறவர்ன்னு தெரியவருது ,யோகிபாபு விஜய்சேதுபதி கிட்ட , எங்கிட்ட பணம் எல்லாம் இல்ல ,எனக்கு தெரிந்த இடத்தில் வட்டிக்கு வேணும்னா நான் வாங்கி தரேன்னு சொல்லி தர்மாகிட்ட கூட்டுகிட்டு போறாரு , அந்த ஏரியாவில் வட்டிக்கு விடுதல் மட்டும் இல்லாம பல இல்லீகல் செயல்களையும் ,சூதாட்ட கிளப்பையும் தர்மா ஆள் அடியாள் பலத்தோடு செஞ்சுகிட்டு இருக்காரு ,. போன இடத்துல விஜய் சேதுபதி பணம் சம்பாதிக்க யோகி பாபு கிட்ட இருக்கிற காசை வச்சு சூதாட்டம் விளையாட ஆரம்பிக்கிறாரு , அதிர்ஷ்டம் அவருக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் கை கொடுக்க, பல லட்சங்களை சம்பாதிக்கிறாரு , இதை பார்க்கிற தர்மா ,,சேது கூட விளையாடுறாரு ,ஆனா அவர் கூட விளையாடுவதற்கு அவர் கிட்டயே பணத்தை வாங்கற சேது ,போட்டியில் ஜெயிச்சாலும், தர்மாவுடைய அராஜகத்தினால ஏமாந்து போறாரு ,அதோட மட்டும் இல்லாம தன்கிட்ட வாங்குன பணத்தை ஒரு வாரத்துக்கு உள்ள திருப்பித் தரணும்னு சொல்லி விஜய் சேதுபதி கிட்டேயும் யோகி பாபு கிட்டேயும் தர்மா கையெழுத்து வாங்குகிறார்

இப்படி சில கோடிகளை ஒரு வாரத்துக்குள்ளாகவே தர வேண்டும் என்கிற நிலைமை விஜய் சேதுபதிக்கும் , சில லட்சங்களை கொடுத்து எப்படியாவது பப்லு பிரிதிவிராஜ வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிற ருக்மணிக்கும், பேங்க்ல இருந்து வாங்குன கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிற திவ்யா பிள்ளைக்கும் ,சாட்சி கையெழுத்து போட்டதனால் பயத்தோடு இருக்கிறாரு யோகி பாபுக்கும் , உடனடியாக பணம் தேவைப்படுற சூழ்நிலையில இருக்காங்க இந்த பண பிரச்சனைகளை தீர்க்க ,இவங்க நாலு பேரும் என்ன செஞ்சாங்க ? அதனால அவங்களோட பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்ததா? இல்லையா? அப்படிங்கறது தான் ஏஸ் படத்தோட மீதி கதை.

ஏஸ் படத்தில் கதாநாயகனாக போல்ட்க் கண்ணன் என்னும் கேரக்டர்ல நடித்திருக்கிற விஜய் சேதுபதி , இதுவரைக்கும் பல படங்களில , அந்த ,அந்த கதாபாத்திரத்திரகங்களுக்கு ஏத்த மாதிரி நிறைய மெனுக்கிடல்களுடன் ,குறிப்பாக பாடி லாங்குவேஜ் முதல் டயலாக் டெலிவரி வரை நிறைய மாற்றங்களுடன் நடித்திருப்பார், ஆனா இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் கெட்டப்பில பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாதுன்னாலும் ,எப்பவும் பாக்குற விஜய் சேதுபதி மாதிரியே, இந்த கதைக்கும் ,கதாபாத்திரத்துக்கும் தேவையான நடிப்பை வழக்கம் போலவே ,இயல்பான முறையில வெளிப்படுத்தி இருக்காரு.,அது மட்டுமில்லாம படத்துல இவர் போட்டுட்டு வர காஸ்ட்டியும் தனித்துவமா தெரியிறதோட அது அழகாகவும் அவருக்கு பொருந்தி இருக்கு, காஸ்டியும்ல வித்தியாசமான சேதுபதிய, இந்த படத்தில் நிச்சயம் நீங்க பார்க்கலாம் .

அறிவுக்கரசனா நடிச்சிருக்கிற யோகி பாபு படத்துக்கு இன்னொரு பலம், விஜய் சேதுபதி கிட்ட பல இடங்களில் சிக்கித் தவிக்கிற யோகி பாபு, தன்னோட நடிப்பு மூலமா இந்த படத்த பக்கா கமர்சியல், காமெடி படமா மாத்தி இருந்திருக்காரு. ஏராளமான படங்கள்ல நடிச்சிட்டு இருக்கிற யோகி பாபு , எப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான டைமிங் கொடுக்கிறாரோ, அப்படிங்கற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறாரு, அதே மாதிரி ரிப்பீட் இல்லாம புதுவிதமான கவுண்டர் டயலாக்கை பேசி நம்பள சிரிக்க வைக்கிறதோட , ஆச்சரியமும் பட வச்சிருக்காரு ,

பாடல்களுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டும் வந்து போற கதாநாயகி மாதிரி இல்லாமல் படம் முழுக்க டிராவல் பண்ற கதாபாத்திரத்தில் ருக்மணி நல்லா நடித்திருக்காங்க , தனக்கு கிடைச்ச கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி படத்துல தான் வரும் காட்சிகளை தன்னோட நடிப்பால அழகாக்கிருக்காங்க, அதேபோல திவ்யா பிள்ளையின் நடிப்பும், தர்மா கேரக்டரில் வரும் B.S அவினாசின் மிரட்டலான நடிப்பும் ,திரைக்கதைக்கு உறுதுணையா இருக்கு, ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளிதிரையில ராஜதுரையாக நடித்துள்ள பப்லு பிரிதிவிராஜ் தன்னுடைய அனுபவம் நிறைந்த நடிப்பை அழகா வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதையை விட்டு விலகாத பாடல்களை கொடுத்திருக்கிற ஜஸ்டின் பிரபாகர், காட்சிகளை விட்டு விலகாத பின்னணி இசை கொடுத்திருக்கிற சாம் CS .இவர்கள் இருவரின் இசையும் ,படத்துக்கு உறுதுணையா இருக்கு. மலேசியாவின் அழகை இனிமையாக பதிவு செய்ததோடு அங்கே இருக்கிற சின்ன சின்ன பகுதிகளையும் சிறப்பாக படமாகியிருக்காரு ஒளிப்பதிவாளர் கரண் B ராவத்.

தான் எடுத்துகிட்ட சிம்பிளான ஒன்லைனுக்கு ஏத்த மாதிரி, ரொம்ப இயல்பாக திரைக்கதை அமைச்சு, அதுக்கேத்த வகையில நட்சத்திரங்களை நடிக்க வச்சு ,பெரிய பிரம்மாண்டமாண நட்சத்திர பட்டாளம் இல்லாம ,ஆர்ப்பாட்டம் ,அடிதடி, ஆக்ரோஷம், பழிக்கு பழி, வஞ்சம் ,சூழ்ச்சி, பகை இவைகளும் இல்லாம, ரொம்ப இலகுவான திரைக்கதையோடு,காட்சிகளை அமைச்சி படத்தை ஒரு ஜனரஞ்கமான , ஜாலியான படமா இயக்கியிருக்கிறார் ஆறுமுக குமார். மேலும் படத்தோட ஆரம்பத்துல திரைக்கதை கொஞ்சம் ஸ்லோவா நகர்ந்தாலும் ,தர்மாகூட விஜய் சேதுபதி சூதாட்டம் விளையாடிய பிறகு, அதுவரை இருந்த தொய்வை மாத்தி, திரைக்கதையில சுவாரசியமான , விறுவிறுப்பான காட்சிகளை கொண்டு படத்தை சிறப்பாக படக்கியிருக்காரு இயக்குனர் ஆறுமுக குமார்.

மொத்தத்தில் ஆட்டம், அமர்க்களம்

Spread the love