Friday, February 13

‘ஆகக்கடவன’ -திரை விமர்சனம்

‘ஆகக்கடவன’ திரை விமர்சனம்

‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.இந்த திரைப்படத்தில் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

ஆதிரன் சுரேஷ்,, சி ஆர் ராகுல் ராஜசிவன் இவங்க மூணு பேரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் ஒண்ணா வேலை பார்த்துட்டு இருக்காங்க, அந்த கடையோட ஓனர் மெடிக்கல் ஷாப்ப விற்கணும்னு முடிவு பண்றப்ப, அதை அந்த மூன்று நண்பர்களுமே வாங்கிக்கலாம் அப்படின்னு முடிவு பண்றாங்க, அதுக்கு தேவையான பணத்தை தயார் பண்றாங்க, ஆனா அந்த பணம் திருடு போயிடுது, அதனால ஊருக்கு போய் தன்னோட சொத்த வித்து பணத்தை தயார் செஞ்சு எடுத்துட்டு வறதுக்கு ஆதிரன் சுரேஷ் முடிவு பண்றாரு ,,அவரோட பைக்ல கூட துணைக்கு போறாரு சி ஆர் ராகுல் அப்படி அவங்க போறப்ப ,அந்த பைக் வருடத்தில் பஞ்சர் ஆயிடுது ,பஞ்சர் போடுவதற்காக காட்டுப்பகுதியில் இருக்கிற ஒரு பஞ்சர் கடைக்கு போறாங்க, அங்க இவங்களுக்கும் ஒரு கடத்தல் கும்பலுக்கும் ஒரு பிரச்சினை ஏற்படுது , அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவங்க எப்படி தப்பிச்சாங்க ??அதற்கு பிறகு என்ன நடந்தது அப்படிங்கறது ஆகக்கடவுன படத்தோட மீதி கதை

ஆதிரன் சுரேஷ் , சி ஆர் ராகுல்,ராஜசிவன் மூணு பேரும் நண்பர்களா நடிச்சிருக்காங்க, அவங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்திக்கிட்டு குறைவில்லாத நடிப்பு கொடுத்திருக்காங்க ,வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கக்கூடிய வின்சென்ட் எஸ் சதீஷ் ராமதாஸ் ,மைக்கேல் இவங்களுடைய கதாபாத்திரமும் அது அவங்க வெளிப்படுத்தி இருந்த விதமும் நன்றாக இருந்தது.

இந்தப் படத்துல ஒளிப்பதிவாளர் லியோ வெ ராஜாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ,சாலை பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலேயும் கதாபாத்திரங்களோடவே பயணிச்சி ,காட்சிகளுக்கு ஏற்ற பின்புலத்த சரியான முறையில ,வெளிப்படுத்துகிற வகையில் அவருடைய கேமரா கோணங்கள் அமைந்திருந்துச்சு.

,இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகன் உடைய பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் நன்றாக பயணித்து உள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையினை சேர்ந்த இந்த திரைப்படத்தில் பெண் கதாபாத்திரங்களின்றி முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள் சொந்தமாக முன்னேறத்துடிக்கும் இளைஞர்களின் வாழ்வியலில் நடிக்கும் சம்பவங்களின் தொகுப்பை சஸ்பென்ஸ் உடன் கூடிய திரைக்கதையாக்கி இயக்குனர் தர்மா ,அறிமுக நடிகர்களை கொண்டு எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சிபாராட்டக்கூடியது.

Spread the love