Saturday, April 25

‘ஆடு ஜீவிதம்’-விமர்சனம்

திரைகடலோடியும் திரவியம் தேடு இந்த முதுமொழிக்குஏற்ப கேரளா கிராமமொன்றில் வாழும் நஜீப் என்பவர் வளைகுடா நாட்டுக்கு சென்று பொருளீட்ட விரும்புகிறார், பிறந்த ஊரையும் மனைவியையும் விட்டு வளைகுடா நாடு செல்லும் நஜீப் முகமது (பிருத்விராஜ்) மற்றும் அவரது நண்பன் ஹக்கீமும் தவறான நபரிடம் சிக்கி கொண்டு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் சிக்கி கொள்கிறார்கள். ஒரு சூழலில் நண்பனையம் பிரிந்து, கடுமையான பாலைவனத்தின் வெப்பத்தினாலும் உண்ண உணவின்றியும் தவிக்கிறார் நஜீப். மறுபடியும் தன் நண்பனைச் சந்திக்கும் நஜீப் வேறு ஒரு நபருடன் தப்பிக்க முயற்சி செய்கிறார், வழியில் நண்பனையும் இழக்கும் நஜீப் அங்கிருந்து தப்பித்தாரா?இல்லையா ?என்பதே மீதி கதை.

சூழ்நிலை கைதியாக ,வாழ்க்கை போராட்டத்தின் வலிகளை சுமந்துகொண்டு கதாபாத்திரத்துக்கு தேவையான அளவுக்கு நேர்த்தியான உடல் மொழி ம் கொண்டு பிருதிவிராஜ் .சிறப்பாக நடித்துள்ளார் மேலும் ஜிம்மி ஜீன்-லூயிசின் நடிப்பு அருமையாக உள்ளது . அமலா பாலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக நடித்துள்ளார்.

வாழ்வியல் போராட்ட கதைகளத்தினை ரசிகர்களின் மனதுக்கு இன்னமும் நெருக்கமாக்க, செழுமையான இசையும், தரமான ஒளிப்பதிவும் தேவை, .அந்த தேவைக்கு இந்தப்படத்தில் ஒரு குறையும் இல்லாதவண்ணம் இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசையும், சுனிலின் ஒளிப்பதிவும் சரியான விகிதத்தில் சிறப்புற அமைந்துள்ளது, இவர்களோடு மட்டுமின்றி பாலைநில சுற்றுப்புற சூழலின் ஒலியனை தரமான தனது பதிவின் மூலம் கண்முன்னே உணர வைத்துள்ள ரசல் பூக்குட்டியும் பாராட்டுக்குரியவர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு,எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முன்பாக சில வாழ்வியல் போராட்ட கதைகள் வந்து இருந்தாலும் அதிலிருந்து தனித்து புதிய பாணியில் பிளெஸ்ஸி இந்த படத்தை படைத்துள்ளார்.

சொந்த நாட்டில் தானும் தன குடும்பமும் நல்ல வாழ்வியல் சூழலில் வாழவேண்டி, அயல் மண்ணில் கடுமையான வாழ்வியல் சூழலை சந்திக்க பயணிப்படும் இளைஞர்களுக்கு இந்த படம் சரியானதொரு விழிப்புணர்வை தரும்.

இருந்தஇடத்தில் இருந்துகொண்டு, பறந்துவிரிந்த பாலை நிலப்பரப்பில் பரிதவிப்போடு, அங்கிருந்து மீள தவிக்கும் ஒருவரின் வாழ்வியல் நிகழ்வுகளை பருந்து பார்வையில் பரிதாப ,கண்கொண்டு பார்க்க அனைவரும் தவறாமல் இந்த ஆடு ஜீவிதம் படத்தை பார்க்கலாம் .

Spread the love