கோமதி (ஊர்வசி) தன்னுடைய கணவர் குமாரசாமியை (குரு சோமசுந்தரம்) பிரிந்து வாழ்ந்து வருகிறார் அவர் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வணங்கி வருகிறார், அந்த சிலையை வைத்து ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் ஆசைபடுகிறார் . கோமதியின் மகன் ரவிக்கு (பாலு வர்கீஸ்) மாலைக் கண் நோய் இருக்கிறது. ரவிக்கு தான் தனியாகத் தொழில் ஓன்றை தொடங்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது ஆனல் அதற்க்கு அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது, தான் தொழில் தொடங்க தேவைப்படும் பணத்துகாக , தன்னுடைய வீட்டில் உள்ள விநாயகர் சிலையை சார்ல்ஸ் (கலையரசன்) உதவியுடன் அம்மாவுக்குத் தெரியாமல் திருடி,பின்பு அதை விற்க ரவி முடிவு செய்கிறார். கடைசியில் ரவி விநாயகர் சிலையை விற்று தன்னுடைய கண் பிரச்சனையை தீர்த்து , தொழில் தொடங்கினாரா ? இல்லையா ? அல்லது கோமதி தான் ஆசை பட்டபடி அந்த சிலையை வைத்து கோவில் கட்டினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படம், தற்போது தமிழில் வெளியாகி உள்ளது, இந்த திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார். இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதையின் நாயகியாக நடிக்கும் கோமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி யதார்த்தமாக நடித்துள்ளார் பார்வை குறைபாடு உள்ளவராக ரவி என்ற பாத்திரத்தில் பாலு வர்கீஸ் மற்றும் சார்ல்ஸ் என்ற பாத்திரத்தில் கலையரசனும் நன்கு நடித்துள்ளார்கள் .

இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ஸ்வரூப் பிலிப் , கே. வி. சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியனுக்கு பக்க பலமாய் பணியாற்றியுள்ளார்கள் ,பொழுது போக்குகாக படம் பார்க்க வரும் ஆடியன்ஸை ஏமாற்றாத வகையில் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிறிய முதலீட்டில் உருவான திரைப்படமாக இருந்தாலும்,அனைத்து தரப்பினரையும் இந்த சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் நிச்சயம் கவரும் .
