ராஜ்குமார் என்னும் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா பொம்மைகளை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரி கிறார் அங்கு புதிதாக வந்த பொம்மை ஒன்று அவரின் கடந்த கால காதலியை நினைவூட்டும் வகையில் உள்ளது , ராஜ்குமார் அந்த பொம்மையை தனது காதலியாகவே நினைத்து வாழ்கிறார்.அதனை யாரிடமும் விற்று விட வேண்டாம் என தனது கம்பெனி ஊழியரிடம் தெரிவிக்கிறார். ஓரு கட்டத்தில் ஊருக்கு சென்று திரும்பி வரும் ராஜ்குமார் அந்த பொம்மையை காணாது கோபத்தின் எல்லைக்கு சென்று கொலைகாரராக மாறிவிடுகிறார். இதன் பின் அந்த பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார். அந்த பொம்மையுடன் மீண்டும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்.ராஜ்குமாரின் அந்த மகிழ்ச்சி தொடர்ந்ததா? அல்லது கொலை வழக்கில் போலீசாரிடம் மாட்டிக்கொள்வாரா ? என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

படத்துக்கு படம் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் மாறுபட்ட நடிப்பை வழங்கிவரும் கதையின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா இந்த படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் தன் இயல்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார் , மான்ஸ்டர் படத்துக்கு பின் இவரும் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது, மேலும் சாந்தினி தமிழரசனும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார் .
‘மொழி’, ‘காற்றின் மொழி’ படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ராதாமோகன் சிறந்த கிளைமாக்ஸ் காட்சியுடன் நிறைவான படம் தந்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் கலந்து வரும், காலத்தை வென்ற தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற பாடல் இன்றைய ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது .
வித்தியாசமான கதைகளத்தில் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களை இந்த பொம்மை நிச்சயம் கவரும் .
