எறும்பு -விமர்சனம்
சார்லியின் முதல் மனைவி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட, சூசனைஅவர் இரண்டாவது கல்யாணம் செஞ்சுக்குறாரு,சூசனுக்கும் ஒரு கைக்குழந்தை இருக்கு,நிலத்தை குத்தகைக்கு எடுத்து M.S. பாஸ்கர் கிட்ட வட்டிக்கு வாங்கி விவசாயம் பண்ணி நஷ்டம் அடையும் சார்லி கடனாளியாகுறாரு ……சார்லியும் சூசனும் கரும்பு வெட்டும் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துறாங்க…ஒரு கட்டத்துல சரியாய் வட்டி கொடுக்காததுனால M.S. பாஸ்கர் தெருவுல நின்னு சார்லிய அசிங்கப்படுத்த, ஒரு குறிப்பிட்ட தேதியில வட்டி அசலும் திருப்பி கொடுக்குறேன்னு சார்லி வாக்குறுதி கொடுக்குறாரு …ரெண்டு பேரும் 10 நாள் தங்கி கரும்பு வெட்டும் வேலைக்கு போறாங்க …
சார்லியின் மகன் சக்தி அவன் தம்பியோட மோதிரம் வேண்டுமின்னு அடம் பிடிக்கிறான் அவன் அக்கா அதை மறுக்க பின்பு உங்க சித்திதான் ஊர்லயே இல்லையேன்னு சக்திய அந்த மோதிரத்தை போட்டுக்க சொல்ல கடைசியில் அந்த மோதிரத்தை தொலைச்சிட்டேன்னு சக்தி அக்கா கிட்ட சொல்லுறான்… சித்தி வர்ர துக்குள்ள அதே மாதிரி ஒரு மோதிரம் வாங்கிடமின்னு முடிவு செஞ்சு பலவேலைகளை செய்றாய்ங்க..ஆனா பணம் பத்தாமல் போகுது..சித்தி வீட்டுக்கு வர்ற நாளும் நெருங்குது,,அதே நேரத்துல M.S. பாஸ்கர்கிட்ட சார்லி சொன்ன தேதியும் நெருங்குது…பணம் கேட்ட இடம் எல்லாம் கைய விரிக்க கடைசியில் சொன்ன தேதியில சார்லி கடனை அடைத்தாரா ? மோதிரம் காணாமல் போன விஷயம் தெரிஞ்சுதா ? அந்த குழந்தைகளோட நிலைமை என்ன ? என்பதுதான் மீதி கதை.

சார்லி பல படங்களெல் காமெடி ,சில பட ங்களில் குணச்சித்திர கேரக்டர் அல்லது ரெண்டும் கலந்த ஒரு வெகுளி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார் ,ஆன் இந்த படத்துல அண்ணாதுரையாக வாழ்ந்துஇருக்காரு …சூசன் வில்லத்தனத்தை தன்னோட பார்வையிலேயே வெளிப்படுத்தி காட்டியிருப்பது புதுசு …..மோனிக்காவும் சக்தியும் பாசம்,பயம், பரிவு, சோகம் ,சந்தோசம் என் பல பரிமாணங்களில அதுவும் த இந்த சிறு வயதில சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க…முக்கியமாக ஜார்ஜ் நல்ல கதாப்பாத்திரதுல நடிச்சு இருக்காரு …குறிப்பாக உண்டியல் திருப்பி கொடுக்கும்கொண்டு வந்து கொடுக்கும் போது அவர் பேசும் வசனமும் நடிப்பும் ரசிகர்களை கை தட்ட வைக்கும்,கந்து வடிகாரராக நடித்துள்ள M.S. பாஸ்கரின் நடிப்பு புதுசாக இருந்தது ..

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் போன நமக்கு ஆச்சர்யத்தையும் சிரிப்பையும் கொடுத்து நம்ம மனசுக்குள்ள இந்த எறும்பு ஆழமாய் பதியும் வகையில இருந்தது, இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ், அவ்ருக்கு வஞ்சம் இல்லாமல் வாழ்த்துக்கள் சொல்லலாம் அதேபோல மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களோட பணிய சிறப்பாக செஞ்சு இருக்காங்க ..

முக்கியமா எந்த ஒரு பெரிய நட்சத்திரங்களும் இல்லாமல் கதையினை மட்டும் நம்பி தயாரித்த சுரேஷ்குணசேகரனின் நம்பிக்கைக்கு மிக சிறந்த பாராட்டுகள்
இது நம்மை கடிக்க வந்த எறும்பு அல்ல…. நம்மை கவர வந்த எறும்பு..
