Sunday, April 26

‘விரூபாக் ஷா’ விமர்சனம்

‘விரூபாக்‌ஷா’ விமர்சனம் 

ஒரு கிராமத்தில் உள்ள  கிராமத்தில்  குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைய அதற்கான காரணம் ஒரு குழந்தையின் சடலத்தை வைத்து பில்லி சூனியம் செய்பவரால் தான் என நம்பும் ஊர் மக்கள்.,  அவரையும் அவர் மனைவியையும் உயிரோடு எரித்துவிடுகின்றனர்..அப்போது,அவரின் மனைவி உங்கள் கிராமமே சுடுகாடாக மாறும்  என்ற சாபம் விடுகிறார், அந்த ஊர் மக்கள்.  மகனை ஆதரவற்றோர் காப்பகத்தில்  சேர்த்துவிடுகின்றனர் இதன் பின் ,12 வருடங்கள் சென்ற நிலையில் அதே கிராமத்தில்  அமானுஷ்ய மரணங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. அந்த ஊரை பூர்வீகமாக  கொண்ட நாயகன்(சாய் தரம் தேஜ் ) அந்த கிராமத்துக்கு வருகிறார் தன் தாயுடன் வரும் நாயகனுக்கு.ஊர்த் தலைவரின் மகளாக சம்யுக்தாவுடன் காதல் ஏற்படுகிறது

கிராமத்தில் திருவிழா நடத்த முடிவு செய்து பூஜை தொடங்கும் நேரத்தில் ஒரு வயதானவர்  கோயில் கருவறைக்குள் இறந்துபோகிறார். இந்த சம்பவத்தால் அந்த ஊரின் மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் கொள்கின்றனர். எட்டு நாள்களுக்கு ஊர் மக்கள் யாரும் ஊரைவிட்டு வெளியேயும்  போகவோ புதிய மக்கள்  யாரும் உள்ளே வரவோ கூடாது. இதை மீறினால் மேலும் பல வீபரீதங்கள் நடைபெறும்  என கோவில் பூசாரி சொல்கிறார். அந்த  சூழலில்  தன் காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப் போக ஒரு பெண் ஊர் எல்லையைத் தாண்டுவதால்  பல அமானுஷ்ய நிகழ்வுகள் அங்கு ஏற்படுகின்றன .அதன் பின் நட க்கும் பில்லி சூனியம், சுடுகாடாய் மாறுன்னு அந்த பெண்விட்ட சாபம் இப்படி சுவாரஸ்யமான திருப்பங்களின் வழியே மீதி கதை பயணித்து செல்கிறது.

கதையின் நாயகனாய் , சாய் தரம் தேஜ் நாயகியாய்  சம்யுக்தா இருவருக்கும் நல்லதொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அதை அவர்கள் தங்களது தனி திறமையால் நன்கு பயன்படுத்தி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள், இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலரும் தைங்கள் பைங்குக்கு குறைவின்றி  நிறைவாய் நடித்துள்ளார்கள்

வலுவான கதை , விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்டு அறிமுக இயக்குநர் கார்த்திக்  டண்டூ  சிறப்பாக இந்த படத்தை  இயக்கியுள்ளார்  சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.மேலும் நவீன் நூலியின் எடிட்டிங், சுகுமாரின் திரைக்கதை போன்ற இந்த நால்வரின் பங்களிப்பும்  இயக்குனருக்கு மிகவும் உறுதுணை ஆக இருந்து படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. தயாரிப்பாளர் பிரசாத் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுக்கு தேவையான பணத்தையும் செலவுசெய்து பிரம்மாண்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.

கோடை விடுமுறைக்கு நல்லதொரு  பொழுபோக்கு அனுபவத்தை இந்த மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்‌ஷா’ தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் வெற்றிநடை போட்டுகொண்டு இருப்பதுபோல தமிழிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

Spread the love