Wednesday, March 18

‘யாத்திசை’விமர்சனம்

பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்களும் அவர்களுக்கு உறுதுணையாய் சோழர்கள் மற்றும் எயினர்கள்,வேளிர், அடங்கிய குழுவினருடன் நடக்கும் போரில், ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக சேரர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள் , சோழர்களோ காட்டுபகுதிக்குள் சென்று தலைமறைவாகின்றார்கள்,இதனால் பாலை நிலத்துக்கு விரட்டியடிக்கப்பட்ட எயினர்கள், அங்கு வேட்டையாடுதல் செய்து வாழ்ந்து வருகின்றார்கள் ,அந்த குழுவைச் சார்ந்த கொதி (சேயோன் )என்னும் வீரன் தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன், பாண்டிய மன்னனை வீழ்த்தி விட்டு மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறான் , ரணதீரனை வென்று மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்பதில் அவர் வெற்றி அடைந்தாரா ? என்பதுதான் மீதிக்கதை.

‘ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் வழங்குவேன் ‘ என்று சபதமேற்கும் வீர இளைஞனாக கொதி என்னும் கதாபாத்திரத்தில் சேயோனும் ,ரணதீர பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ஷக்தி மித்ரனும் சிறப்பாக நடித்து தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள் மற்றும் ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா போன்றோரும் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

பழங்கால மன்னர் காலப் படங்களுக்கு ஏற்ற பின்புலத்தை அமைக்கும் பெரும் பணியில் ரஞ்சித் குமாரின் கலை இயக்கம் மற்றும் வெ. சுரேஷ் குமாரின் உடை வடிவமைப்பும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது ,ஓம் சிவபிரகாஷின் சண்டைக் காட்சிகளும், சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. . அகிலேஷ் காத்தமுத்துவின் தரமான ஒளிப்பதிவு, கதை நடக்கும் கால கட்டத்தில் ரசிகர்களை பயணிக்க வைத்துள்ளது

புதுமையான கதைகளத்தில் ,புதிய கலைஞர்களை கொண்டு, குறைந்த முதலீட்டில் நிறைவான படத்தை கொடுத்த அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன், தன் முதல் படத்திலேயே தனி கவனம் பெற்றுள்ளார்.இவரது முதல் முயற்சிக்கு பாராட்டுகள்.

Spread the love