Monday, April 20

‘“கடைசி காதல் கதை”-விமர்சனம்

கதையின் நாயகனாய் ஆகாஷ் பிரேம் குமார்மற்றும் புகழ், விஜே ஆஷிக் என நண்பர்கள்.  நாயகன் ஆகாஷு ன் காதலியாக ஏனாக்‌ஷி ,இவர்களுக்குள் நிபந்தனை காதல், அந்த நிபந்தனையை நாயகன் மீற அது காதலில் பிரிவை தர நாயகன் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார் பின்பு அங்கிருந்து வெளியே வரும் நாயகன் இனி காதல் தோல்வியால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, உலகில் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை மீதி படத்தில் சொல்வது தான் ‘கடைசி காதல் கதை.’.

கதையின் நாயகனாய் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமாரும் ,அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலி, நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், மைம் கோபி,சாம்ஸ்,என பல நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டகேரக்டர்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக நடிகர் சாம்ஸ் இடம் பெறும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன

ஜனரஞ்சகமான, நகைச்சுவை ,பொழுதுபோக்கு படமாக உருவாக்கி, குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இயக்கியுள்ளார் இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன்.சிவசுந்தரின் ஒளிப்பதிவும், சேத்தன் கிருஷ்ணாவின் இசையில் பாடல்களும் கதையின் நகர்வுக்கு ஏற்ற வகையில் நன்கு கையாளப்பட்டுள்ளன.

“கடைசி காதல் கதை”.பொழுபோக்கிற்கான படம்.

Spread the love