Friday, October 2

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் ‘பொற்கால ஆட்சியின் சாதனைகள்’ ‘காமராஜருடன் கால் நூற்றாண்டு’ புத்தக வெளியீட்டு விழா!

காமராஜ் திரைப்பட இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 51 – ம் ஆண்டு நினைவு தின விழா!

காமராஜ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில்,தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான A.J.பாலகிருஷ்ணன் சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது நினைவு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜர் ‘பொற்கால ஆட்சியின் சாதனைகள்’ மற்றும் காமராஜரின் உதவியாளர் திரு. C.P.S.வைரவன் எழுதிய ‘காமராஜருடன் கால் நூற்றாண்டு’ ஆகிய நூல்கள் இணைந்த புத்தகத்தை வெளியிட்டார்.

இவ்விழாவினில் பேசிய இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன்…

இன்றைக்கு பெருந்தலைவரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள். இது ஒரு வேதனையான நாள் அவர் இறந்தது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் அவர் வாழ்ந்த இந்த வீடு சிதைக்கப்பட்டுள்ளது, சொல்லப்போனால் அவருடைய அடையாளங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, அவர் காலத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் எடுத்து வீசப்பட்டு, இது ஒரு ஆடம்பரமான ஜமீன்தாரின் பங்களா போன்று உருவாக்கப்பட்டுள்ளது, இனி வரும் சமுதாயம் இந்த வீட்டை பார்க்கும் போது காமராஜர் ஏதோ பண்ணையார் ஜமீன்தார் என்று நினைக்கின்ற வகையில் இதனுடைய தலங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இது சரியான நிபுணர்கள் துணை கொண்டு மீண்டும் பெருந்தலைவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்ததைப் போன்று சீரமைக்கப்பட வேண்டும் இப்படி சீரமைக்கப்பட்டால் தான் இதனுடைய மாண்பு சிறக்கும், இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் இதனை கண்டு அவர்கள் மிஸ்லீடு செய்யப்படுவார்கள் இன்று வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் இது குறித்து அவரிடம் வலியுறுத்த இருக்கிறோம் என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

Spread the love