Saturday, April 18

“ரூம் பாய்” – திரை விமர்சனம்

ஒரு சாதாரண கதையாக ஆரம்பித்து, காட்சிகள் செல்ல செல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக மாறும் படம் தான் “ரூம் பாய்”.

கதையின் நாயகனான நிகில் கூர்நோக்கு மையத்தில் கல்வி கற்று முடித்த பின் ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக பணிக்கு சேருகின்றார் அந்த சொகுசு விடுதி வெளிப்படையாக பார்ப்பதற்கு அழகாக தோன்றினாலும் , அதன் மறுபக்கம் கொடூரங்களின் கூடாரமாக உள்ளது, உள்ளே மனித நேயமே இல்லாமல் நடைபெறும் கொடுமைகள், பாலியல் அத்துமீறல்கள் ,அதிகார மீறல்கள் என அங்கு நடப்பவை அந்த சொகுசு விடுதியின் இருண்ட முகமாக இருக்கிறது .இந்த உண்மைகளை அங்கு ரூம் பாயாக பணியாற்றும் நிகில் கண்டுபிடிக்கிறார். இவைகளைக் கண்டு வெறும் சாட்சியமாக நின்று விடாமல் அந்த கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்கி ,அந்த சொகுசு விடுதியின் மேலாளரை கொலை செய்து விடுகிறார். இதற்கிடையில் கூர்மேற்கு மையத்தினுடைய காப்பாளரும் மாயமான வழக்கில் காவல்துறையும் ,கொலையாளியை தேடி வில்லன் குழுவினரும் ,நிகிலை வேட்டையாட களமிறங்குகிறார்கள் .இரண்டுக்கும் இடையில் சிக்கிய நிகில் என்னவானார் ?என்பதுதான் ரூம் பாய் படத்தின் மீதி கதை.இந்தப் படத்தின் கதையின் நாயகனாக C .நிகில் நடித்துள்ளார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை அவர் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். அறிமுகப்படம் என்பது தெரியாத அளவிற்கு நடிப்பில் இவர் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் என்றே சொல்லலாம். நாயகியாக வர்ஷா நடித்துள்ளார். தன்னுடைய தோற்றத்தாலும் ,நடிப்பாலும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக அவர் அமைந்துள்ளார். மற்றும் அருள்ராஜ், பிரபாகர், காத்து கருப்பு கலை ,இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, கேரளா பெஹமின்,இமான் அண்ணாச்சி,பிர்லா போஸ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை ,படத்தின் பல கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

வேலன் சகாதேவன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் . படத்தின் பாடல்கள், கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ரசிக்க கூடிய வண்ணம் உள்ளன சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் செல்லக்கூடிய கதையின் காட்சிகளுக்கு இணக்கமான பின்னணி இசையினை இவர் படம் முழுவதும் கொடுத்து இருக்கிறார்.இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் சி .பாரதி ராஜன், இவர் கதைக்கும் ,காட்சிகளுக்கும் தேவையான அளவு ஒளியமைப்பு, மற்றும் ஷாட் கம்போசிஷன் மூலமாக படத்தினை அழகாக பதிவு செய்திருக்கிறார். திரைக்கதையின் வேகத்திற்கு இடையூறு இல்லாத வகையில் காட்சிகளை கோர்வையாகவும் ,விறுவிறுப்பாகவும் D.V.மீனாட்சி சுந்தர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

குறைந்த முதலீட்டில் ,நிறைவான படமாக அமையக்கூடிய வகையில் ஒரு சஸ்பெண்ட், திரில்லர் கதை அம்சத்தோடு இந்த படத்தை இயக்குனர் ஜெகன் ராயன் படமாக்கி உள்ளார்.

மொத்தத்தில் இந்த “ரூம் பாய்” சஸ்பென்ஸ்,த்ரில்லர் பாணி பட ரசிகர்களுக்கு நல்லதொரு விஷுவல் ட்ரீட்.

Spread the love