Friday, May 1

‘வெஞ்சென்ஸ்’ – திரைப்பட விமர்சனம்

‘வெஞ்சென்ஸ்’ – திரைப்பட விமர்சனம்

பள்ளிப் பருவத்திலிருந்து தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் தன் மீது மற்றவர்களுக்கு கவனம் இருக்க வேண்டும் என்ற எண்ண வெளிப்பாட்டிலேயே வாழும் வேணி (அபர்ணதி) அவரது பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் இடத்தை பிடிக்கிறார். அதன் பிறகு வளர்ந்தபின் நன்கு படித்து ஐஏஎஸ் ஆகி மாவட்டத்திற்கு ஆட்சியாளராக உயர்கிறார் ,இதன்பிறகு தன்னுடைய பதவியின் வழியாக எடுக்கும் நடவடிக்கை முயற்சிகளினால் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் ,முதல் அமைச்சரான இளவரசுனால் நிறைய முட்டுக்கட்டைகள் வருகிறது ,ஆனால் இவற்றையெல்லாம் முறியடித்து அவரால் நினைக்க முடிந்த வகைகளை எப்படி செய்து முடிக்க முடிந்தது ?என்பதை தான் ‘வெஞ்சென்ஸ்’படத்தின் மீதி கதை.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் வேணி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி, நடித்திருக்கிறார். துணிச்சலும், புத்தி கூர்மையும் நிறைந்த வலுவான ஒரு கதாபாத்திரத்தில் அவர் தன்னுடைய திறம்பட்ட நடிப்பினை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.அவருக்கு பிறகு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூகூடிய வகையில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசு,மற்றும் அபர்ணநதியின் தந்தையாக நடித்திருக்க கூடிய காளிவெங்கட் ,அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் லிவிங்ஸ்டன் மற்றும் சரவண சுப்பையா,மங்கள் போன்ற அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை குறைவின்றி வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும் பார்ப்பதற்கு ரசிக்கும் படி உள்ளன ,அவரது பிண்ணனி இசையும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளது .எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளின் தன்மைகளுக்கு ஏற்ப நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது . அதோடு இம்ரானின் படத்தொகுப்பு, தரும் விறுவிறுப்பும் இயக்குனரின் பணிக்கு உற்ற துணையாக உள்ளது. ஒரு இளம் பெண்ணின் வாழ்வியல் கதைக்களத்தில் அரசியல் சம்பவங்களை இணைத்து , திரைக்கதையாக்கி  நன்கு  படமாக்கியுள்ளார் இயக்குனர் ராகுல் அசோக் .

அரசியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த ‘வெஞ்சென்ஸ்’ நல்லதொரு திரைவிருந்துதான் .

Spread the love