ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன் சார்பில் பத்மா ராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் எழுதியுள்ள திரைப்படம் உருட்டு உருட்டு இதில் கஜேஷ் நாகேஷ்,ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி , பாபா லட்சுமணன் பத்ம ராஜு ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர், ஒளிப்பதிவு- யுவராஜ் பால்ராஜ் பாடல் இசை-அருணகிரி, பின்னணி இசை- கார்த்திக் கிருஷ்ணன்.

மது மீது மிகுந்த நாட்டமுள்ள நாட்டம் உள்ளவராக உள்ளார் கஜேஷ்,அவர் மீது அளவற்ற நேசத்தையும் காதலையும் கொண்டிருக்கும் நாயகி ரித்விகா ஸ்ரேயா. நாயகன் கஜேஷை மாற்றி தன் மீது காதல் கொள்ள வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார், இதற்காக பல முயற்சிகளை நாயகி எடுத்தாலும் நாயகன் கஜேசுக்கோ மதுவின் மீது அளவற்ற நாட்டம் இருக்கிறது ,இறுதியாக நாயகி கஜேஷை திருத்த எடுக்கும் முயற்சி என்ன? அதன் பின் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் என்ன? அப்படி நாயகி என்னதான் செய்தார்? என்பதுதான் உருட்டு உருட்டுப்படத்தின் மீதிக் கதை.

நாயகனாக கஜேஷ் நாகேஷ் நடித்துள்ளார் மது மீது அளவற்ற நாட்டம் கொண்ட சந்துரு என்னும் கதாபாத்திரத்தில் ,அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரித்விகா ஸ்ரேயாவை பொருத்தவரையில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து அம்சங்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் .
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நாயகியின் மாமாவாக மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார் மூணு பொண்டாட்டி முனுசாமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவரது மூன்று மனைவிகளாக அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர் நடித்துள்ளார்கள் மேலும் பத்ம ராஜு ஜெய்சங்கர், பாவா லட்சுமணன் என பிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள் .
இசையமைப்பாளர் அருணகிரி இசையில் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற பாடல்களும் கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசையும் ரசிக்கும் படியே உள்ளன. ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ் ,கதைக்கும் காட்சிகளுக்கும் தக்கபடி குறைவில்லாத படப்பதிவினை செய்துள்ளார்.
இன்றைய சமூக வாழ்வியலில் புரையோடிப் போயிருக்கும் விஷயங்களை கதையில் கலந்து அவற்றின் காட்சிகளை நகைச்சுவை பாணியில் படமாக்கி உள்ளார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது
