முமாறன் இயக்கத்தில் ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி பேனரின் ஜெயக்கொடி அமுல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ,ஸ்ரீகாந்த், தேஜு அஸ்வினி லிங்கா, பிந்து மாதவி ,முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
மருந்து பொருட்களை வினியோகிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் முத்துக்குமார் போதை பொருள்களையும் கடத்துவராக உள்ளார் அவரிடம் வேலை பார்க்கும் மணி (ஜி. வி. பிரகாஷ்) பார்மசி ஒன்றில் பணிபுரியும் ரேகாவை ( தேஜு அஸ்வினி) காதலிக்கிறார் ஒரு சமயம் முத்துக்குமார் கொடுக்கும் பார்சலை உரிய நபரிடம் விநியோகிக்க செல்லும் மணியின் வாகனம் அவர் கொண்டு வந்த பொருட்களுடன் காணாமல் போகிறது விஷயத்தை அறிந்த முத்துக்குமார் கோபமடைந்து மணியின் காதலி ரேகாவை கடத்தி வைத்துக் கொண்டு காணாமல் போன தன்னுடைய விலைமதிப்பு மிக்க பார்சலை கொண்டு வந்து தர வேண்டும் அல்லது பணம் கொடுக்க வேண்டும் என்று மணியை மிரட்டுகிறார் இதற்கிடையில் தொழிலதிபராக உள்ள அசோக் அவரது மனைவி அர்ச்சனா அவர்களது மகள் அனு இவர்களுடைய கதையும் இணைகிறது, அசோகின் மனைவியிடம் அவரது முன்னாள் காதலன் லிங்கா குறுக்கிட்டு பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறான், தன்னுடைய காதலியை ரேகாவை மீட்க நண்பன் ரமேஷ் திலக்குடன் மணி பலவழிகளில் முயற்சித்தாலும் பலன் கிடைக்கவில்லை ,இந்த சூழ்நிலையில அசோக்கின் குழந்தை கடத்தப்படுகிறது , காதலியை காப்பாற்ற நினைக்கும் மணி பணத்திற்காக ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார், இறுதியில் என்ன நடந்தது ?இந்த குழந்தை மீட்கப்பட்டதா ?இதன் பின்புலங்களில் இருப்பவர்கள் யார் ? மணியால் தன் காதலியை மீட்க முடிந்ததா ?இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை தருகிறது பிளாக்மெயில் படத்தின் மீதி கதை.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ஜி, வி.பிரகாஷ் மணி என்னும் கதாபாத்திரத்தில் தன்னுடைய காதலியை மீட்க பணத்துக்காக போராடும் இளைஞனாக சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இவரது நடிப்பு அனைத்து காட்சிகளிலும் தனித்தன்மையுடன் நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. தொழில் அதிபராக அசோக் என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். கடத்தப்பட்ட தன்னுடைய குழந்தையை காணாமல் தவிப்பதும், அதனை கண்டுபிடிக்க செயல்படும் இடங்களிலும் தன்னுடைய அனுபவ நடிப்பை நன்கு பதிவு செய்திருக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷின் காதலியாக ரேகா என்னும் கதாபாத்திரத்தில் தேஜு அஸ்வினியும் அர்ச்சனா என்னும் கதாபாத்திரத்தில் பிந்து மாதவியும், எதிர்மறை கதாபாத்திரத்தில் லிங்காவும், இவர்களுடன் முத்துக்குமார்,ரெடின் கிங்ஸ்லி ரமேஷ் திலக் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு தேவையானபின்புலத்தினை தரும் நேர்த்தியான பின்னணி இசையினை சாம் சிஎஸ்ஸும் அதே போல சிறப்பான முறயில் காட்சிகளை பதிவு செய்துள்ள கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும் ப்ளஸ்களாக உள்ளன படத்தொகுப்பாளரான சான் லோகேஷின் பணி படத்தின் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் பெரிதும் துணை நின்றுள்ளது.
கதைக்களத்தில் பல கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் சில தேவைகள் அதனை நோக்கிய தேடல்கள் அதனால் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் , கடத்தல், பயமுறுத்தி பணம் திரட்டுதல் அதனை முறியடித்தல் என ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் நகரும் திரைக்கதையுடன் நேர்த்தியான வகையில் படத்தினை கொண்டு போக செய்துள்ளார் இயக்குனர் மு.மாறன் .இவர் இதற்கு முன் இயக்கி இருந்த இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களை போலவே இந்த படமும் திரை ரசிகர்களுக்கு மற்றுமொரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவே அமைந்துள்ளது
