கதையின் நாயகன் டீஜே தன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு குடிவரும் நாயகி ஜனனியை காதலிக்கிறார், இவர்களது காதலை அறியும் ஜனனியின் அம்மா மந்திரா ,அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் நாயகனிட மிருந்து நாயகியை பிரிப்பதற்கு ஒரு திட்டமும் திட்டுகிறார், ,ஆனால் மந்த்ராவின் முயற்சிகளையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா ?இல்லையா என்பதை உசுரே படத்தின் மீதி கதை சொல்கிறது.

இந்தப் படத்தின் காதல் ஜோடிகளாக டீஜேவும், ஜனனியும் நடித்துள்ளார்கள் ,காதல் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் கொண்டுள்ள டீஜே ,தன்னுடைய பங்கிற்கு நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஜனனி தனது தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்,. ஆனால் நடிப்பில் இன்னமும் கவனம் செலுத்த வேண்டும். மற்றும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் நாயகியின் தாயாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மந்த்ரா நடித்துள்ளார், தான் கதாநாயகியாக நடித்த காலத்தில் கவர்ச்சிகரமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த மந்திரா ,இந்த படத்தில் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .நாயகனின் பெற்றோராக கிரேன் மனோகரும், செந்திகுமாரியும் நடித்துள்ளார்கள் ,அதேபோல நாயகனின் நட்பு வட்டாரத்தில் தங்கதுரை, ஆதித்யா கதிர் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளார்கள், .இவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் பாடல் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் ,அந்த வகையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் கிரண் ஜோஸ் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி தன்னுடைய பங்களிப்பை நன்றாகவே கொடுத்துள்ளார்.
கிராமத்து வாழ்வியல் காட்சிகளை நயம்பட பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய் .எடுத்துக்கொண்ட காதல் கதைக்கு தெளிவான திரைக்கதை அமைத்து இளம் நடிகை நடிகர்களை வைத்து ,யதார்த்தமான காதலை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நவீன் டி கோபால்..
