Monday, May 25

‘போகி’ -திரைப்பட விமர்சனம்

‘போகி’ படத்தில் நபி நந்தி, சரத், சுவாசிகா, பூனம்கவுர், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.ஒளிப்பதிவு – ராஜா C சேகர், இசை – மரியா மனோகர், பாடல்கள் – சினேகன், வசனம் – S.T. சுரேஷ்குமார், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
தயாரிப்பு – V i குளோபல் நெட்வொர்க்ஸ் ,கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – S. விஜயசேகரன்.
எந்தவிதமான அடிப்படை வாழ்வியல் வசதிகளும், வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் வளர்ந்த நாயகன், தனது தங்கை மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிறான் அந்த பெண்ணும் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல, அந்த மலை கிராமமே பெரும் மகிழ்ச்சியோடும், கனவோடும் அப்பெண்ணை வழி அனுப்பி வைக்கிறார்கள்.ஆனால் மருத்துவம் படிக்கும் சூழலின் போது , மரணமடைந்த பிறகும் மார்ச்சுவரியில் உள்ள பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதனை உலகிற்கு விற்கும் ஒரு கும்பலை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுப்பதால் கொலை செய்யப்படுகிறார் இதனால் அவர் மருத்துவராக இங்கு வந்து மருத்துவ சேவையை செய்வார் என எதிர்பார்க்கும் மலைவாழ் மக்களின் ஆசைக் கனவு நிறைவேறாமல் கலைந்து போகிறது.இதனால் ஆத்திரமடையும் ‌ அந்த பெண்ணின் சகோதரரும் ( நபி நந்தி) , அந்த பெண்ணை காதலித்து திருமண செய்ய விரும்புபவரும் ( சரத்) இணைந்து இந்த கும்பலை கண்டறிந்து பழி தீர்க்க திட்டமிடுகிறார்கள். அதன்பின் நடந்தது என்ன ? என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி, தங்கை மீது பாசமும், அந்த தங்கைக்கு ஏற்பட்ட அநியாயத்துக்காக, வெகுண்டு பழி தீர்க்கும் அண்ணனாக நன்கு நடித்துள்ளார் .கதையின் நாயகியாக நடித்துள்ள சுவாசிகா ,மலை வாழ் இன பெண்களின் பிரதிநிதியாக,,தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்.நாயகனுடன் இணைந் கதாபாத்திரத்தில் சரத்தும் , மற்றும் காவல்துறை அதிகாரியாக வேல ராமமூர்த்தியும் , எதிர்மறையான கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரனும் , மேலும் அனுபவ நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்ர், சங்கிலி முருகன், போன்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் பூனம்கவுர்.

மலை கிராம மக்களின் வாழ்வியல் சூழலை இயல்பாக காட்சிப்பதிவாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் .இசையமைப்பாளர் மரியா மனோகரின் இசையில், சினேகனின் எழுத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளன ,,பின்னணி இசையும் கதையோட்டத்துடன் சிறப்பாக பயணித்துள்ளது.

சமகால வாழ்வியலில் உள்ள சமூக பிரச்சகளையும், குறிப்பாக மலைவாழ் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை சூழலையும் அதனுடன் இணைத்து, எடுத்துக்கொண்ட கதைக்கு இணக்கமாக திரைக்கதை அமைத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் S. விஜயசேகரன்.

Spread the love