Monday, May 25

’ஸ்மைல் மேன்’- திரைப்பட விமர்சனம்

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம்.

காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) நேரிடும் ஒரு விபத்தினால் `அல்சைமர்ஸ்’ என்று சொல்லக்கூடிய மறதி பாதிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் அவருடைய முழு நினைவுகளும் ஒரு வருட கால அளவில் மறைந்துவிடும் என்ற சூழலில் அவர் உள்ள நிலையில் ,. `ஸ்மைல் மேன்’ எனப்படும் சீரியல் கில்லரால், அந்த வட்டாரத்தில் தொடர்ச்சியான கொலைகள் நிகழ்கின்றன. அந்த தொடர் கொலைகளை பற்றி விசாரணை செய்ய வரும் அரவிந்த் (ஸ்ரீகுமார்), அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க சிதம்பரம் நெடுமாறனின் உதவியினை நாடுகிறார். தனது பழைய நினைவுகளை இழந்துக் கொண்டிருக்கும் சிதம்பரம் நெடுமாறனால் சீரியல் கொலையாளியை கண்டு பிடிக்க உதவ முடிந்ததா ?.அதன் பின் நடப்பவை என்ன? என்பதே இந்த `தி ஸ்மைல் மேன்’.படத்தின் மீதி கதை.

சிதம்பரம் நெடுமாறன் என்னும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார்,மிக நேர்த்தியான நடிப்பின் மூலமாக கதாபாத்திரத்தினுடன் ஒன்றி போகிறார். இது அவருக்கு 150 வது படம். மேலும் ஸ்ரீகுமார் ,இனியா,சிஜா ரோஸ் சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், போன்றவர்களும் ஏற்று கொண்ட கதாபாத்திரைங்க்ளில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்

திரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை தருபவை , படத்தின் ஒளியும், ஒலியும் தான் ,இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகனும் ,இசை அமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷும் தங்களுடைய நேர்த்தியான ஒத்துழைப்பை செவ்வனே கொடுத்து, படத்தின் இயக்குனர்களுக்கு பக்க பலமாய் இருந்துள்ளார்கள். படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் படத்தின் காட்சிகளில் விறுவிறுப்பான வேகத்தினை கொடுத்துள்ளார்.

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் அமைக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான  கதைக்கு, பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து, வலுவான திரைக்கதையுடன் இந்த படத்தினை இயக்குநர்கள் ஷியாம் – பிரவீன் இயக்கியுள்ளார்கள்

’ஸ்மைல் மேன்’-ரசிகர்களை கவர்வான்.

Spread the love