Monday, May 25

அலங்கு- திரை விமர்சனம்

மலைப்பகுதியில் வசிக்கும் இளைஞனான  தர்மா (குணாநிதி) , தான் படிக்கும் பாலிடெக்னிக்கிலிருந்து நீக்கபட்ட நிலையில் அந்த வட்டாரத்தில் கிடைக்கக்கூடிய வேலைகளை செய்து வருகிறார் .தர்மன் ஒரு நாயை தத்தெடுத்து காளி என்று அதற்க்கு பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்து வருகிறார். பணி நிமித்தமாக கேரளாவுக்கு செல்லும் தர்மா காளியையும் ,உடன் அழைத்து செல்கிறார் .அங்கு உள்ள செம்பன் வினோத் தன் மகள் மீது எல்லையற்ற பாசமும்,அந்த மகளுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய துணியும் அப்பாவாக இருக்கிறார் .இந்த நிலையில் அங்கு நடைபெறும் நிகழ்வினால் , காளிக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து காளியை மீட்கும் முயற்சியில் தர்மாவுக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் பின் அவர் பயணிக்கும் பாதை நிகழ்வுகளின் தொடர்ச்சியே ‘அலங்கு’ படத்தின் கதை..

தர்மா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாய் நடித்துருக்கும் நடித்திருக்கும் குணாநிதி, உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆக்ஷன் காட்சிகளிலும் , நன்கு நடித்து கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.

செல்வாக்கு மிக்க மனிதராக மகள் மீது அளவற்ற்ற பாசம் கொண்டவராக நடித்துள்ள செம்பன் வினோத் தன நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார் நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகாவின் நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது மேலும் காளி வெங்கட்டின் கதாபாத்திரமும் அதை அவர் தன் இயல்பான நடிப்பின் மூலம் வெளிபடித்தி இருப்பதும் குறிப்பிட்டு சொல்லக்கூடியது.

மலை சூழ் வனப்பகுதியின் மாட்சியினை மிக நேர்த்தியாக காட்சிப்பதிவு செய்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமார், அஜீஷின் இசையில் ஒழிக்கும் பின்னணி இசை, காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தினை கொடுத்து கதையோடு பயணிக்க வைக்கிறது

மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் ,எல்லா அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் மனப்பான்மையினையும் வெளிப்படுத்த கூடிய கதை களத்தினை எடுத்துக்கொண்டு ,அதை பொருத்தமான காட்சிப்பிண்ணனியில் படமாக்கி உள்ளார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல்.

 

மொத்தத்தில், ‘அலங்கு’ அனைத்து உயிர்களையும் நேசிக்க வைக்கும் எளிய மக்களின் வாழ்வியல் பதிவு.

Spread the love