Tuesday, February 3

‘கடைசி உலகப் போர்’.-விமர்சனம்

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. 

தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி) ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக உள்ளார் அவருக்கும் கல்வி அமைச்சராகப் ஆக போகிற முதல்வரின் மகள் கீர்த்தனாவுக்கும் (அனகா) காதல் ஏற்படுகிறது , தான்தான் கிங் மேக்கர் என்று நினைக்கும் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (நடராஜ்), பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருப்பதை எடுக்க ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். அந்த கலவரத்தின் நிலவரம் கைமீறி செல்லும் நிலையில் ராணுவம் களம் இறக்கிவிடப்படகிறது . ஆதியை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கின்றனர்.இந்த கால சூழலில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவைக் தாக்குகின்றன. அதன் பின் நடந்தவகளை சொல்லுவதே ‘கடைசி உலகப் போரின் மீதி கதை

கதையின் நாயகனாய்  தமிழரசன் என்னும் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார் அவரது முந்தய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவரை இந்த படத்தில் காண முடிகிறது. புதிய கதைக்களத்தில் புதிய பாணியில் அவரும் நிறைவாக நடித்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் அனகா தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறை காண முடியாத அளவுக்கு நன்கு நடித்துள்ளார், முதலமைச்சராக நடித்திருக்கும் நாசரும் ,அவரின் உறவினராக கிங் மேக்கர் என்று அனைவரயும் ஆட்டிப்படைக்கும்  நட்ராஜூம் தங்களுடைய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள் புலிப்பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், என பெரும் நட்சத்திர பட்டாளம், அவரவர்கள் வரும் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா. கலை இயக்குனர் ஆர்.கே.நாகு இருவரின் கண் மற்றும் கலை வண்ணங்களில் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது.

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, மாறுபட்ட கதை களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் படைப்பாக இந்த படத்தினை உருவாக்கியுள்ளது .பாராட்டுக்குரியது

Spread the love