Sunday, September 20

அரண்மனை 4 -திரை விமர்சனம்

இயக்குநர் சுந்தர்.சி.யின் அரண்மனை திரைப்பட தொடர்களில் மேலும் ஒன்றாக வெளியாகி உள்ள இந்த அரண்மனை4- ம் ஒரு முழு நீள பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட படமாகவே அமைந்துள்ளது.

தன் தங்கை தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, தனது தங்கையின் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிய சுந்தர் c முயலுகிறார் அதன் பின் தங்கை வீட்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களின் பின் புலம் என்ன? தங்கையின் குழந்தைகளை அவர் எப்படி காப்பாற்றினார் ? போன்ற பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது ‘அரண்மனை – 4’. மீதி கதை.

சரவணன் என்னும் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் , செண்டிமெண்ட் என தனக்கென உரித்த பாணியில் சுந்தர்.சி, நன்கு நடித்துள்ளார்.மேலும் செல்வி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் ,கோவை சரளா,சந்தோஷ் பிரதாப்,டெல்லி கணேஷ்,ஜெயபிரகாஷ், சிங்கம் புலி உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

படத்துக்கு இசை ஹிப்ஹாப் ஆதி, இது இவருக்கு சுந்தர் சி வுடன் ஆறாவது படம்.கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் அவரது இசை அமைக்கப்பட்டுள்ளது .இது போன்ற கதைகளுக்கு இசையோடு கூட ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானது ,அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணசாமியும் சிறப்பாக கையாண்டுள்ளார். கலை இயக்குனர் குருராஜின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான காட்சிஅமைப்புகள் நேர்த்தியாக வடிவமைக்கப்ட்டுள்ளன.ஆலிவெரின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கும், வேகத்துக்கும் வழிவகுத்துள்ளது.

ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட், என அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் ஒரு சேர அமைக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை 4 படமானது, கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ நல்லதொரு சாய்ஸ் .

Spread the love