Friday, April 24

ரெபல் -விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜூ நடித்துள்ள ரெபல் படதினை நிகேஷ் இயக்கியுள்ளார்.

மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மைந்தர்களான கதிர் (G .V .பிரகாஷ் குமார்),மற்றும் செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) ஆகியோர் உட்பட பலர் பாலக்காட்டிலுள்ள கல்லூரியில் பி.ஏ. படிக்க சேர்கிறார்கள் தமிழ் மாணவர்களாகிய இவர்களுக்கு, இரு கேரளக் கட்சிகளின் மாணவர் அமைப்பினை சேர்ந்தவர்களினால் இனக் கொடுமைகள் நடத்தப்பட்டு, அடக்கு ஒடுக்குமுறைமைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் அங்கே ஆசிரியர்கள் முதற்கொண்டு மாணவர்கள் வரை, தமிழர்களை இழிவாக நடத்தும் போக்கினை கண்டு ,.அதனை எதிர்க்கும் தமிழ் மாணவர்கள் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா ?என்பதே ரெபல் படத்தின் கதை.

கதையின் நாயகனாய் கதிர் என்னும் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கும் வலுவும் , பலமும் சேர்க்கும் வகையில் நிறைவாக நடித்துள்ளார் ,கதையின் நாயகி மமிதா பைஜு கதாபாத்திரத்துக்கு நன்கு பொருந்திப்போகிறார், மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் ஆதித்யா பாஸ்கர் ,கருணாஸ், சுப்ரமணியசிவா, ‘கல்லூரி’ வினோத் ,வெங்கடேஷ் வி.பி., ஷாலு ரஹீம் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்

காட்சிகளுக்கு ஏற்றதொரு பதிவுகளை கொடுத்துள்ள அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு பாராட்டக்கூடியது,  அதோடுமட்டுமின்றி இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமாரின் இசை பங்களிப்பும் பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பும் படத்தின் கதையோட்டத்துக்கு தேவையான விறுவிறுப்பை தந்துள்ளது,

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ளார்.கதைக்களத்துக்கு மிகவும் பொருத்தமான் நட்சத்திரங்களை கொண்டு நிறைவான படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் .

மொத்தத்தில் இளைஞர்களின் உணர்வுகளை பேசும் இந்த படம் யாவரையும் கவரும். .

Spread the love