தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் கதை
கெளதம் தனது, பள்ளி நாட்களின் காதலி மலர் விழியை நினைத்தவண்ணம் வாழ்ந்து வருகிறார். பள்ளி பருவம் முடித்த பிறகு வெளிநாடு சென்றுவிட்ட மலர் எங்கே ,எப்படி உள்ளார் என்று ஏதும் அறியாமல் முடிந்தளவு அவளை தேடுவதோடு,காதலி வருவாள் என கெளதம் (பிரஜன்) காத்து கொண்டிருக்கிறார்.கௌதமிற்கு, ஆனந்தி என்ற முறைப்பெண் இருக்கிறார். அவருக்கு சிறுவயதிலிருந்தே கெளதம் மேல் காதல், ஆனால் கெளதம் மலர்விழி நினைவுடனே இருப்பதால், ஆனந்தி தற்கொலைக்கு சென்றுவிடுகிறார், இதனால் சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்தியை கெளதம் திருமணம் செய்யும் சூழல் உருவாகின்றது , இறுதியில் கெளதம் ஆனந்தியை மணந்தாரா? அல்லது மலர் விழியுடன் சேர்ந்தாரா? என்னும் கேள்விக்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதி கதை.
காதலி நினைவாகவே வாழும் காதல் நாயகனாய் பிரஜன்.தனது கதாபாத்திரத்துக்கு தேவையான அளவுக்கு இயல்பாக நடித்துள்ளர். முறை மாமன் மீது அளவற்ற காதல் கொண்டுள்ள இளம்பெண் கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ்.மேலும் சினாமிகா ,ரோஹித் , யுவலட்சுமி ,மனோபாலா.ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, முத்துராமன், யாவரும் குறைவின்றி நடித்துள்ளார்கள்.
இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்துக்கு மிகை பெரிய பக்க பலமாய் அமைந்துள்ளது இந்தப்படம் அவரது இசைப் பங்களிப்பில் 1417-வது படைப்பு எனபது குறிப்பிடத்தக்கது ,முதல் காதலின் நினைவுகளை நெஞ்சங்களில் அசைபோட வைக்கும் காதல் படத்தினை இயக்குனர் ஆதிராஜன் இயக்கியுள்ளார் .

முதல் காதலின் நினைவுகளை மீட்டும் படம் என்பதால் இளம் ரசிகர்களை மட்டுமின்றி காதல் வயப்பட்ட யாவரையும் கவரும் .
